Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ராமேஸ்வரத்தில் பாலிதீன் பைகள் விற்றால் குற்றவியல் சட்டம் பாயும்

Print PDF

தினமலர் 06.08.2010

ராமேஸ்வரத்தில் பாலிதீன் பைகள் விற்றால் குற்றவியல் சட்டம் பாயும்

ராமேஸ்வரம் : ""ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் சுற்றுச்சூழலை கெடுக்கும் பாலிதீன், பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவோர்,விற்பவர் மீது இந்திய குற்றவியல் சட்டம் 188 ன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,'' என ,தாசில்தார் ராஜேந்திரன் தெரிவித்தார். ராமேஸ்வரம் நகர் பகுதியில் நேற்று தாசில்தார் தலைமையில் வர்த்தக நிறுவனங்களில் பாலிதீன் சோதனை செய் யப்பட்டது. நுகர்வோர் இயக்க நிர்வாகி ரவிச்சந்திரன், தீவு விபத்து மீட்டு சங்க தலைவர் களஞ்சியம், தாலுகா அலுவலக பொறுப்பாளர் அப்துல்ஜபார் உட்பட பலர் சென்றனர். ரோட்டோர ஆடு,கோழி இறைச்சி கடைகள், பேக்கரிகள் மற்றும் உணவு விடுதிகளில் நடத்திய சோதனையில் 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பாலிதீன்,பிளாஸ்டிக் பொருட் கள் பறிமுதல் செய்யப் பட்டன. மேலும், கோழி கடைகள் உட்பட 21 நிறுவனங்களுக்கு 6200 ரூபாய் அபராதம் விதிக்கப் பட்டது.

" ஒரு முறை அபராதம் கட்டிய கடைகளில், மீண்டும் பாலிதீன் பயன்படுத்தினால், விற்றால் இந்திய குற்றவியல் சட்டம் 188 ன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,''என ,தாசில்தார் ராஜேந்திரன் தெரிவித்தார்.