Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நெல்லையில் இனிப்பு கடை "சீல்' உடைப்பு: மீண்டும் சீல் வைக்க எதிர்ப்பு

Print PDF

தினமணி 13.08.2010.

நெல்லையில் இனிப்பு கடை "சீல்' உடைப்பு: மீண்டும் சீல் வைக்க எதிர்ப்பு

திருநெல்வேலி,ஆக.12: திருநெல்வேலியில் சுகாதாரக் கேடாக இருந்ததாக "சீல்' வைக்கப்பட்ட இனிப்புக் கடை கிட்டங்கி, சீல் உடைத்து திறக்கப்பட்டது.

இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை அங்கு மீண்டும் சீல் வைக்க சென்றபோது, எதிர்ப்பு தெரிவித்து சிலர் தடுத்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக மாநகராட்சி, சந்திப்பு காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி சந்திப்பு கைலாசபுரத்தில் ஒரு இனிப்புக் கடைக்குச் சொந்தமான கிட்டங்கி உள்ளது. இந்த கிட்டங்கியில் சுகாதாரமற்ற முறையில் உணவுப் பொருள்கள் தயாரிக்கப்படுவதாகவும், சுகாதாரமற்ற எரிபொருள் பயன்படுத்தப்படுவதாகவும் அப் பகுதி மக்கள், மாநகராட்சிக்கு புகார் தெரிவித்தனர்.

இப் புகாரின் அடிப்படையில் அங்கு திடீர் சோதனை மேற்கொண்ட மாநகராட்சி சுகாதார அதிகாரிகள், அந்த கிட்டங்கி மிகவும் சுகாதார சீர்கேடாக செயல்படுவதை உறுதி செய்தனர். இதைத் தொடர்ந்து அந்த கிட்டங்கியை பழுது நீக்கி, சுகாதாரத்துடன் இயக்குமாறு அந்த கிட்டங்கியின் உரிமையாளர் ஜலாலுதீனுக்கு மாநகராட்சி நோட்டீஸ் வழங்கியது.

ஆனால் அவர், அந்த கிட்டங்கியை சீரமைக்கவும் இல்லை, சுகாதாரத்தை பேண நடவடிக்கை எடுக்கவும் இல்லை என கூறப்படுகிறது. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் ஜூன் 17-ல் அந்த கிட்டங்கிக்கு சீல் வைத்தனர். இந்நிலையில் மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் புதன்கிழமை கைலாசபுரம் பகுதியில் ஆய்வுக்குச் சென்றபோது, அங்கு அந்த கிட்டங்கி சீல் உடைக்கப்பட்டு செயல்படுவது தெரியவந்தது.

இதையடுத்து திருநெல்வேலி மாநகராட்சி தச்சநல்லூர் மண்டல உதவி ஆணையர் சுல்தானா தலைமையில் வியாழக்கிழமை அந்த கிட்டங்கிக்கு சீல் வைக்க வந்தனர். அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த கொக்கிரகுளத்தைச் சேர்ந்த குத்புதீன் உள்ளிட்ட சிலர், மாநகராட்சி அதிகாரிகளை மீண்டும் சீல் வைக்கவிடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்படும் சூழ்நிலையும் ஏற்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து உதவி ஆணையர் சுல்தானா, சந்திப்பு காவல் நிலையத்தில் அரசு பணியை செய்ய விடாமல் தடுத்ததாக குத்புதீன் உள்ளிட்ட சிலர் மீது புகார் செய்தார். இதேபோல மாநகராட்சி வைத்த சீலை உடைத்ததாக ஜலாலுதீன் மீதும் சந்திப்பு காவல் நிலையத்தில் மாநகராட்சி சார்பில் புகார்