Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

3 ஆண்டுகளுக்கு மேல் புறம்போக்கு நிலத்தில் குடியிருப்போருக்கு இலவச பட்டா வழங்க தடை; ஐகோர்ட்டு உத்தரவு

Print PDF

மாலை மலர் 17.08.2010

3 ஆண்டுகளுக்கு மேல் புறம்போக்கு நிலத்தில் குடியிருப்போருக்கு இலவச பட்டா வழங்க தடை; ஐகோர்ட்டு உத்தரவு

3 ஆண்டுகளுக்கு மேல் புறம்போக்கு நிலத்தில் குடியிருப்போருக்கு
 
 இலவச பட்டா வழங்க தடை;
 
   ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை, ஆக. 17- சிவகாசி வரி செலுத்துவோர் சங்கத்தின் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-

தமிழகம் முழுவதும் ஏரி, குளங்கள் உள்ளிட்ட அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து 10 ஆண்டுகள் குடியிருப்போருக்கு பட்டா வழங்கப்படும் என தமிழக அரசு 2006-ம் ஆண்டு ஆணை பிறப்பித்தது. இந்த உத்தரவால் ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் ஆக்கிரமிக்கப்படும் அபாயம் உள்ளதால் அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் நாங்கள் வழக்கு தொடர்ந்துள்ளோம்.

இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் புறம்போக்கு நிலத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் குடியிருப்போருக்கு இலவச பட்டா வழங்கப்படும் என்று கடந்த ஏப்ரல் மாதம் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆணையானது தமிழகம் முழுவதும் உள்ள புறம்போக்கு நிலங்களையும், நீர் நிலைகளையும் ஆக்கிர மிப்போரை ஊக்குவிப்பதாக உள்ளது. எனவே இதுகுறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளதால் அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இந்த வழக்கை தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து அரசின் புதிய உத்தரவான புறம்போக்கு நிலங்களில் 3 ஆண்டுகளுக்கு மேல் குடியிருப்போருக்கு இலவச பட்டா வழங்குவதை அமல்படுத்த கூடாது என்று தடை விதித்தனர்.

Last Updated on Wednesday, 18 August 2010 07:53