Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நெல்லிக்குப்பம் நகராட்சி கமிஷனருக்கு நோட்டீஸ் ரூ.1 லட்சம் அபராதம்

Print PDF

தினமலர் 25.08.2010

நெல்லிக்குப்பம் நகராட்சி கமிஷனருக்கு நோட்டீஸ் ரூ.1 லட்சம் அபராதம்

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத் திற்கு மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் அனுமதி பெறா விட்டால் நகராட்சி அதிகாரிக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப் படுமென எச்சரித்துள்ளனர்.

நெல்லிக்குப்பம் நகராட்சியில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் கொண்டு வரப் பட் டது. சுகாதாரத்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் அந் தத் திட்டம் செயல்படுத்தப்படாமல் உள்ளது. ஆடு அறுக்கும் கூடத்துக்கு 26 லட்சம் ரூபாய் செலவில் நவீன முறையில் கட்டடம் கட்டடப் பட்டு திறக்கப்படாததால் சுகாதார குறைவாக திறந்த வெளியில் ஆடுகளை அறுக் கின்றனர்.சுகாதாரத்துறை அதிகாரிகள் இதை கண்டு கொள்ளாமல் அலட்சியமாக உள்ளனர். சுகாதாரத்துறை அதிகாரிகள் பணியில் உள்ளனரா என சந்தேகமாக உள்ளது. திடக்கழிவு மேலாண்மை, ஆடு அறுக்கும் கூடத்துக்கு மாசு கட்டுப்பாடு வாரிய அனுமதி பெற வேண்டும். அதை ஆண்டு தோறும் புதுப்பிக்க வேண்டும். நெல்லிக் குப்பம் நகராட்சியில் இந்த இரண்டு திட் டத்துக்கும் கடந்த 6 வருடமாக மாசு கட் டுப்பாடு வாரிய அனுமதி பெறவில்லை. பலமுறை நினைவூட்டல் கடிதம் எழுதியும், சுகாதாரத்துறை அலுவலர் அனுமதி வாங்காமல் அலட்சியமாக உள்ளார். இந்நிலையில் உடனடியாக அனுமதி பெறாவிட்டால் சட்டப்படி ஒரு லட்சம் ரூபாய் அபராதமும், 5 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கப்படுமென நகராட்சி கமிஷனருக்கு, மாசு கட்டுப்பாடு வாரியம் நோட்டீஸ் அனுப் பியுள்ளது.இந்த அனுமதியை பெற வேண்டியது சுகாதார அலுவலரின் வேலையாகும். அவரது அலட்சியத்தால் அதிகாரிகள் சிக்கலில் மாட்டியுள்ளனர். உடனடியாக அனுமதி பெற நடவடிக்கை எடுக்கா விட் டால் அதனால் கிடைக்கும் தண்டனையை சுகாதார அலுவலரையே சாரும் என அவருக்கு கமிஷனர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.


Last Updated on Wednesday, 25 August 2010 07:36