Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மார்க்கெட்: அடிப்படைக் கட்டமைப்பு கட்டணம் செலுத்தக் கோரிய நோட்டீஸூக்குத் தடை

Print PDF

தினமணி 26.08.2010

மார்க்கெட்: அடிப்படைக் கட்டமைப்பு கட்டணம் செலுத்தக் கோரிய நோட்டீஸூக்குத் தடை

மதுரை,ஆக.25: மதுரை விளாங்குடி காய்கனி மார்க்கெட்டிற்கு கட்டமைப்புக்கான அடிப்படைக் கட்டணம் | 45.62 லட்சம், உணவுப்பொருள் விற்பனை யார்டுக்கு | 70.05 லட்சம் செலுத்தக் கோரிய, உள்ளூர் திட்டக் குழுமத்தின் நோட்டீஸýக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.

இதுகுறித்து மதுரை சென்ட்ரல் மார்கெட் காய்கனி மற்றும் அழுகும் பொருள் வியாபாரிகள் சங்கத் தலைவர் இம்மானுவேல் ஜெயராஜ் தாக்கல் செய்த மனு:

மதுரை மீனாட்சி கோயில் அருகே உள்ள சென்ட்ரல் மார்க்கெட் போக்குவரத்து நெருக்கடி காரணமாக மாட்டுத்தாவணிக்கு இடமாற்றம் செய்யப்படுகிறது. நாங்கள் எங்கள் சங்க உறுப்பினர்களுக்காக 15.25 ஏக்கர் நிலம் வாங்கி, | 15.05 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகம் கட்டி, அதை எங்கள் சங்க உறுப்பினர்களுக்கு வாடகைக்கு விட்டுள்ளோம். 2009-ம் ஆண்டிலிருந்து இந்த மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.

மார்க்கெட்டில் அனைத்து அடிப்படை வசதிகளும் எங்கள் நிதியிலிருந்து செய்யப்பட்டுள்ளது. கடைகளுக்குக் கட்டணம் வசூலிக்க சங்கத்துக்கு மட்டுமே உரிமை உள்ளது. இந்நிலையில், உள்ளூர் திட்டக்குழு உறுப்பினர் செயலர், அடிப்படைக் கட்டமைப்புகளுக்கான கட்டணமாக | 45.62 லட்சம் செலுத்துமாறு 21.5.2010-ல் நோட்டீஸ் அளித்துள்ளார். இதற்குத் தடைவிதித்து, ரத்து செய்யவேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல, உணவு தானிய விற்பனை யார்டு |4 கோடியே 19.65 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ளது. இதன் நிர்வாக இயக்குநர் ரத்தினவேலுக்கு அனுப்பிய நோட்டீஸில், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளுக்காக | 70.05 லட்சம் கட்டுமாறு தெரிவித்துள்ளனர். இதற்கும் தடைவிதித்து ரத்து செய்யவேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி எம்.ஜெயபால், நோட்டீஸýக்கு இடைக்காலத் தடைவிதித்து விசாரணையை ஒத்திவைத்தார்.