Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நெல்லை ஸ்வீட் தயாரிப்பு குடோனுக்கு ‘சீல்’

Print PDF

தினகரன் 27.08.2010

நெல்லை ஸ்வீட் தயாரிப்பு குடோனுக்கு சீல்

நெல்லை, ஆக. 27: சுகாதார சீர்கேடு காரணமாக நெல் லை சந்திப்பில் உள்ள ஒரு ஸ்வீட் தயாரிப்பு குடோ னுக்கு மாநகராட்சி அதிகாரி கள் நேற்று சீல் வைத்தனர்.

நெல்லை மதுரை சாலை யை சேர்ந்தவர் மாடசாமி. இவருக்கு சொந்தமான ஸ்வீட் தயாரிப்பு சந்திப்பு ஆவின்பாலகம் அருகே இயங்கி வருகிறது. இந்த ஸ்வீட் ஸ்டாலுக்கான குடோன் செய்யது லாட்ஜில் இயங்கி வருகிறது.

இந்த குடோனில் சுகா தார சீர்கேடுகள் நிறைந்து இருப்பதாகவும், அசுத்த மான முறையில் உணவுகள் தயாரிக்கப்படுவதாகவும் மாநகராட்சி கமிஷனர் சுப்பையனுக்கு புகார்கள் வந் தன. மாநகராட்சி உதவி சுகாதார அதிகாரி சாந்தி தலைமையில் உணவு ஆய் வாளர் சங்கரலிங்கம், சுகா தார ஆய்வாளர்கள் சுப்பிரமணியன், அந்தோணி, துப்பு ரவு மேற்பார்வையா ளர் பழனி ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று குடோ னுக்கு சென்று சோதனை நடத்தினர்.

அங்குள்ள பொருட்கள் அழுக்கடைந்த நிலையிலும், ஸ்வீட் வகைகள் சுகாதாரமற்ற முறையிலும் தயாரிப் பதை கண்டறிந்தனர். இதனையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் குடோனுக்கு சீல் வைத்தனர். இதுபோல் தொடர்ந்து மற்ற குடோன்களிலும் ஆய்வு நடத்தப்பட உள்ளதாக மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

நெல்லை சந்திப்பில் உள்ள சுவீட் தயாரிப்பு குடோனில் சுகாதார சீர்கேடுகள் காரணமாக மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.