Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தரமற்ற முறையில் பாதாள சாக்கடை பணி: காண்டிராக்டருக்கு ரூ.1 லட்சம் அபராதம்- கமிஷனர் நடவடிக்கைக்கு கொ.மு.க. பாராட்டு

Print PDF

மாலை மலர் 27.08.2010

தரமற்ற முறையில் பாதாள சாக்கடை பணி: காண்டிராக்டருக்கு ரூ.1 லட்சம் அபராதம்- கமிஷனர் நடவடிக்கைக்கு கொ.மு.. பாராட்டு

கோவை, ஆக. 27- கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டலத்தில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன. இதில் 9-வது வார்டில் நடைபெறும் கட்டமைப்பு பணி தரமற்ற முறையில் நடைபெறுவதை கொ.மு..வினர் கண்டு பிடித்தனர். இது குறித்து கொ.மு.. மாநகர அமைப்பாளர் நாகராஜ் மற்றும் நிர்வாகிகள், துணை மேயரிடம் புகார் தெரிவித்தனர்.

அதன் பேரில் துணை மேயர் கார்த்திக் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பணிகளை பார்வையிட்டனர். தரமற்ற செங்கற்கள் மற்றும் பொருட்கள் பயன்படுத்தப்பட்டது தெரிய வந்ததால் பணிகள் உடனடியாக நிறுத்தப்பட்டன.

இதைத்தொடர்ந்து அந்த பணியை மேற்கொண்ட காண்டிராக்டருக்கு மாநக ராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா ரூ. 1 லட்சம் அப ராதம் விதித்தார். மேலும் 15 நாட்களுக்கு ஒரு முறை ஒப்பந்ததாரர்களுடன் ஆலோசனை கூட்டம் நடை பெறும் என்றும் அறிவித்தார். கமிஷனரின் இந்த நடவடிக்கைக்கு கொ.மு.. பாராட்டு தெரிவித்துள்ளது.

இது குறித்து கொ.மு.. மாநகர அமைப்பாளர் நாகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டலம் 9-வது வார்டில் நடைபெறும் பாதாள சாக் கடை திட்டத்தில் தரமற்ற பொருட்கள் கொண்டு கட்டப்படுவது கொ.மு.. அமைப்பால் கண்டறியப்பட்டது. உடனே மாநகராட்சி அதிகாரிகளால் பணி நிறுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக அந்த பணி யின் காண்டிராக்டருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக் கப்பட்டுள்ளது. மேலும் 15 நாட்களுக்கு ஒரு முறை ஒப்பந்ததாரர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத் தப்படும் என கமிஷனர் தெரிவித்துள்ளார். இதை கொ.மு.. வரவேற்கிறது.

மேலும் பாதாள சாக் கடை திட்டத்தில் 3 காண்டி ராக்டர்கள் பணி செய்வ தால் தகவல் தொடர்பு பரிமாற்றத்தால் ஏற்படும் குறைகளை உடனடியாக சரி செய்ய வேண்டும்.

சல்பூரிக் ரெசிஸ்டண்ட் சிமெண்ட் இன்னும் ஒப்பந்த தாரர்களுக்கு வழங்கப் படவில்லை. ஜவஹர்லால் நேரு புனரமைப்பு திட்டத் துக்கு மாநகராட்சியால் அமைக்கப்பட்ட அறிவுறுத்தும் குழு முழுமையாக உபயோகப் படுத்தப்படவில்லை. கொ.மு.. இதுபோன்ற பணிகளை கொங்கு நாடு முழுவதும் கண்காணித்து பொது மக்களின் பணம் விரயமாவதை தடுப்பதற்கு அரசுக்கு எல்லா உதவிகளையும் செய்யும். மேற்கண்டவாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.