Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பழைய சென்ட்ரல் மார்க்கெட்டுக்கு சரக்கு வாகனங்கள் செல்லத் தடை

Print PDF

தினமணி 02.09.2010

பழைய சென்ட்ரல் மார்க்கெட்டுக்கு சரக்கு வாகனங்கள் செல்லத் தடை

மதுரை, செப்.1: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே செயல்பட்டு வந்த பழைய சென்ட்ரல் மார்க்கெட்டுக்கு சரக்கு வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகர போலீஸ் கமிஷனர் பி.பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளதாவது: மதுரை சென்ட்ரல் மார்க்கெட் புதன்கிழமை முதல் மாட்டுத்தாவணிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. மார்க்கெட் வியாபாரிகள் தங்களது பொருள்களை உடனடியாக புதிய மார்க்கெட்டுக்கு எடுத்துச் சென்று கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், மாநகராட்சி நிர்வாகம் மற்றும் போக்குவரத்து போலீஸôர் நடத்திய கூட்டத்தில், மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் தண்ணீர் மற்றும் மின்சார வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் மேற்கொள்ள ஆலோசிக்கப்பட்டது.

தற்போது நகருக்குள் மார்க்கெட்டுக்கு வரும் அனைத்து வாகனங்களும் நேராக புதிய மார்க்கெட்டுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது. எனவே, புதன்கிழமையிலிருந்து பழைய சென்ட்ரல் மார்க்கெட்டுக்கு சரக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி வரும் வாகனங்கள் மீது போலீஸ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்