Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மண்டபம் பேரூராட்சியில் குடிநீர், துப்புரவு பணிகள் கடும் பாதிப்பு செயல் அலுவலரை நியமிக்க கோரிக்கை

Print PDF

தினகரன் 04.09.2010

மண்டபம் பேரூராட்சியில் குடிநீர், துப்புரவு பணிகள் கடும் பாதிப்பு செயல் அலுவலரை நியமிக்க கோரிக்கை

மண்டபம், செப்.4: மண்டபம் பேரூராட்சியில் நிரந்தர செயல் அலுவலர் பணியில் இல்லாததால் வரி விதிப்பு ரசீதுகள், சான்றிதழ்கள் பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. துப்புரவு, குடிநீர் விநியோக பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

மண்டபம் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இங்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் விநியோகம் மற்றும் சுழற்சி முறையில் துப்புரவு பணிகள் நடக்கிறது. காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் வீடுகளுக்கு தனி இணைப்பு மற்றும் பொதுக்குழாய்கள் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது.

இப்பணிகளை செயல் அலுவலர் ஆய்வு செய்வார். இந்நிலையில் கடந்த 6 மாத ங்களுக்கு மேலாக நிரந்தர செயல் அலுவலர் இல்லாமல் துப்புரவு, குடிநீர் விநியோகப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மண்டபம் முகாம் 18வது வார்டு திமுக செயலாளர் முருகேசன், காங்கிரஸ் நிர்வாகி குமரே சன் ஆகியோர் கூறுகை யில்,`18வது வார்டு அண்ணா குடியிருப்பில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் திறந்து விடப்படும் குடிநீர் அரை மணி நேரம் கூட விநியோகம் ஆவதில்லை. இதனால் மக்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அனைத்து வார்டுகளிலும் இதே நிலை நீடிக்கிறது.

குப்பைகள் அப்புறப்படுத்தப்படாததால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. நிரந்தர செயல் அலுவலர் இல்லாததால் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், வரிகள் தொடர்பான ரசீதுகள் பெறுவதிலும் தாமதம் ஏற்படுகிறது.

ஊழியர்கள் பணி களை சரிவர செய்வதில்லை. இந் நிலையை போக்க நிரந்தர செயல் அலுவலர் நியமிக்க வேண்டும்என்றனர்.

பொதுமக்கள் கூறுகை யில், `பேரூராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சுகாதார பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட கால இடைவெளியில் சீராக துப்புரவு பணிகள் நடப்பதில்லை.

இதுகுறித்து பேரூராட்சியில் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இப்பணிகளை கவனிக்கும் செயல் அலுவலர் பணியிடம் பல மாதங்களாக காலியாக உள்ளது. உடனே காலி பணியிடத்தை நிரப்ப வேண்டும்என்றனர்.