Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பெங்களூரில் புதிய கட்டிடங்களுக்கு ஆலோசனை வழங்க நிபுணர் குழு சிந்தியா கோரிக்கை

Print PDF

தினகரன் 08.09.2010

பெங்களூரில் புதிய கட்டிடங்களுக்கு ஆலோசனை வழங்க நிபுணர் குழு சிந்தியா கோரிக்கை

பெங்களூர், செப். 8: பெங்களூர் மாநகரில் புதியதாக கட்டப்படும் கட் டிடம், அப்பார்ட்மெண்ட் ஆகியவைக்கு குடிநீர் மற்றும் கழிவுநீர் வசதி செய்து கொடுக்க ஆலோசனை வழங்க நிபுணர் குழு அமைக்க வேண்டும் என்று மஜத கோரிக்கை வைத்துள்ளது.

இது குறித்து சிந்தியா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பெங்களூர் மாநகரம் மழை காலத்தில் தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதியாக மாறி வந்தாலும், தினமும் உயரமான கட்டிடங்கள், அப்பார்ட்மெண்ட் ஆகியவை உருவாகி வருகிறது. புதியதாக கட்டப்படும் கட்டிடங்களுக்கு குடிநீர் இணைப்பு மற்றும் கழிவுநீர் வசதி செய்து கொடுப்பதற்கான கோப்புகள் மாவட்ட பொறுப்பு அமைச்சரிடம் அனுப்பி அவரின் ஒப்புதல் பெற்ற பின் அனுமதிக்கப்படுகிறது. இது தவறான முன்னுதாரணமாகும். மாநகரில் நிலவும் பாதிப்பை சரிப்படுத்தும் ஞானம் அமைச்சர் உள்பட மக்கள் பிரதிநிதிகளுக்கு குறைவாக உள்ளது. மக்கள் பிரதிநிதிகளை குறைத்து மதிப்பிட்டு நான் சொல்லவில்லை.

மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பது அரசின் கடமை என்றாலும், அதற்கான திட்டம் வகுத்து செயல்படுத்தும் தகுதி சம்மந்தப்பட்ட துறையில் படித்து பட்டம் பெற்றவர் களுக்கு மட்டுமே உள்ளது. அவர்களால் தான் பாதிப்பில்லாத வகையில் இணைப்பு கொடுக்க முடியும். ஆகவே புதிய கட்டிடங்களுக்கு குடிநீர் இணைப்பு மற்றும் கழிவுநீர் வசதி செய்து கொடுக்கும் ஆலோசனை வழங்கி தனி பிரிவு தொடங்கி, சம்மந்தப்பட்ட துறையில் அனுபவம் உள்ள நிபுணர்களை நியமனம் செய்ய வேண்டும். அவர்கள் கோப்பில் கையெழுத்திட்டு அனுமதி கொடுக்கும் அதிகாரம் வழங்க வேண்டும் என்றார்.