Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி நெல்லையில் குடிநீர் உறிஞ்சிய 26 மின்மோட்டார்கள் பறிமுதல்

Print PDF

தினகரன் 22.09.2010

மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி நெல்லையில் குடிநீர் உறிஞ்சிய 26 மின்மோட்டார்கள் பறிமுதல்

நெல்லை, செப். 22: நெல்லை மாநகராட்சி பகுதியில் சட்ட விரோதமாக குடிநீர் உறிஞ்சிய 26 மின் மோட்டார்கள் நேற்று பறிமுதல் செய்யப்பட்டன. வீட்டுக் குடிநீர் இணைப் பில் சட்ட விரோதமாக மோட்டார் பொருத்தி குடி நீர் உறிஞ்சுவது தொடர்பாக ஏராளமான புகார்கள் மாநகராட்சிக்கு சென்றன. அதன் அடிப்படையில் நேற்று காலை 6 மணி முதல் 8 மணி வரை பாளை மிலிட் டரி லைன் தெரு, கிருபாகரன்தெரு, பேரின்பதெரு, எல்லாம் வல்லவன் தெரு, சிவன்கோயில் கீழத்தெரு, வடக்குரதவீதி, பிச்சுவனத்தெரு, கடிகார ஆசாரி தெரு, கோட்டூர் ரோடு, தச்சை மண்டலம் சிந்துபூந் துறை, செல்விநகர் தெருக்களிலும் வீட்டுக் குடிநீர் இணைப்புகள் இன்ஜினியர்கள் குழுவால் ஆய்வு செய்யப்பட்டது.

இதில் சட்ட விரோதமாக குடிநீர் உறிஞ்சிய 26 மோட் டார் பம்புகள் கைப்பற்றப்பட்டன. மோட்டார் பொருத்திய வீடுகளில் குடி நீர் இணைப்புகளும் உடனடியாக துண்டிக்கப்பட்டன. குடிநீர் இணைப்பு தாரர்கள் மோட்டார் பொருத்தி சட்ட விரோதமாக குடிநீர் எடுத் தால் குற்ற வழக்கு தொடரப்படும் என மாநகராட்சி கமிஷனர் சுப்பையன் எச்சரித்துள்ளார். இந்த ஆய்வுகள் தொடர்ந்து மாநகராட்சி யின் பிற பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட உள்ளது. பாளை. பகுதியில் மாநகராட்சி அதிகாரிகள் நடத்திய சோதனையில் வீடுகளில் குடிநீர் குழாயில் முறைகேடாக பொருத்தப்பட்ட மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.