Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குப்பை தொட்டியில் போஸ்டர் ஒட்டினால் வழக்கு நெல்லை மாநகராட்சி அறிவிப்பு

Print PDF

தினகரன் 22.09.2010

குப்பை தொட்டியில் போஸ்டர் ஒட்டினால் வழக்கு நெல்லை மாநகராட்சி அறிவிப்பு

நெல்லை, செப்.22: குப்பை தொட்டிகள் மீது போஸ்டர் ஒட்டுபவர்கள் மீது வழக்கு தொடரப்படும் என நெல்லை மாநகராட்சி அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

திடக்கழிவு மேலாண்மை திட்டத் தை செயல்படுத்தும் வகையில் நெல் லை மாநகராட்சியில் 4.5 டன் கொண்ட 140 குப்பை தொட்டிகளும், பச்சை கலர் குப்பை தொட்டிகள் 280ம் வைக்கப்பட்டுள்ளன. தெருக்களில் உள்ள இக்குப்பை தொட்டிகள் மீது அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் ஆங்காங்கே போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின் றன. சில இடங்களில் குப்பை தொட் டியே தெரியாத அளவுக்கு போஸ்டர்கள் மறைத்து வருகின்றன.

இதை தடுக்கும் வகையில் போஸ்டர் ஒட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநகராட்சி சுகாதார துறை தீர்மானித்துள்ளது. பாளை திருவனந்தபுரம் சாலையில் சித்தா கல்லூரி, பாளை மண்டல அலுவல கம், சூப்பர் மார்க்கெட் ஆகியவற்றின் அருகேயுள்ள குப்பை தொட்டிகளில் பல்வேறு கட்சிகளின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இவற்றை அகற்றி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சுகாதார ஆய்வாளர் சாகுல்ஹமீது நேற்று பாளை போலீசில் புகார் அளித்துள்ளார். இப்புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் ஆலோ சித்து வருகின்றனர்.

பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தெருவில் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகள் மீது யாராவது போஸ்டர் ஒட்டினால் அவர்கள் மீது வழக்கு தொடரப்படும் என கமிஷனர் சுப்பையன் எச்சரித்துள்ளார்.