Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அனுமதியின்றி பேனர் வைக்க தடை டிஎஸ்பி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு

Print PDF

தினகரன் 24.09.2010

அனுமதியின்றி பேனர் வைக்க தடை டிஎஸ்பி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு

தாராபுரம், செப். 24: தாராபுரத்தில் போலீசார் அனுமதி இல்லாமல் பிளக்ஸ் பேனர் கள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தாராபுரம் போலீஸ் சார்பில் அனைத்துக் கட்சி நிர்வாகிகளுக்கும் பிளக்ஸ் பேனர்கள் வைப்பது குறித்த ஆலோசனைக்கூட்டம் சிவரஞ்சனி மஹாலில் நடத்தப்பட்டது. காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் மந்திரமூர்த்தி தலைமையில் நடை பெற்ற கூட்டத்திற்கு திமுக, காங்கிரஸ், மா.கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட அனைத் துக் கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

நகரப் பகுதியில் வைக்கப்படும் விளம்பர பிளக்ஸ் பேனர்கள் இதுவரையில் நகராட்சியின் அனுமதியை முறைப்படி பெறுவதில்லை. போக்குவரத்துக்கு இடை யூறாக வைக்கப்படும் பேனர் கள், வைக்கப்பட்டு பல மாதங்கள் ஆனாலும் அப்புறப்படுத்தாமல் இருக்கிறது.இதனால் பல்வேறு இடையூறுகள் ஏற்படுகிறது. பொதுமக்கள் பெரிய அளவில் பாதிப்புக்குளாகின்றனர். முக்கியமான சாலைகளில் தொடர் விபத்து ஏற்படுகிறது. எனவே, இனிமேல் போலீஸ் அனுமதியுடன் பிளக்ஸ் பே னர்கள் வைக்கப்பட வேண் டும் அனுமதியில்லாத பேனர் களுக்கு தடை விதிக்கப்படுகிறது. நிகழ்ச்சிக்கு 2 நாள் முன்பு பேனர்கள் வைக்கப்படவேண்டும். நிகழ்ச்சி முடிந்ததும் 2 நாட்களுக்குள் பேனர்களை அப்புறப்படுத்த வேண்டும். உத்தரவை மீறி வைக்கப்படும் பேனர்கள் பறிமுதல் செய்யப்படும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் பாபர் மசூதி பிரச் னை குறித்த தீர்ப்பை ஏற்று, சட்டம் ஒழுங்கு பாதுகாப்பிற்கு எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படாதவாறு நடந்து கொள்ளவும் கூட்டத்தின் மூலம் அனைத்து கட்சியைச் சேர்ந்தவர்களை யும் கேட்டுக் கொள்ளப்பட் டது.

தாராபுரம் காவல் ஆய் வாளர் இளமுருகன், குண்ட டம் காவல் ஆய்வாளர் கிருஷ் ணசாமி, திமுக நகர செயலா ளர் கே.எஸ்.தனசேகர், நகரமன்ற துணைத் தலைவர் மாரிமுத்து, காங்கிரஸ் கட்சி சார்பில் நடராஜ், கருணாக ரன், மா.கம்யூ தாலுகா செயலாளர் வெங்கட்ராமன், கனகராஜ், பி.ஜே.பி நகர செயலாளர் சிவக்குமார், ஒன்றிய செயலாளர் ராம சாமி, பாமக நகர தலைவர் பெரியசாமி, ஒன்றிய செய லாளர் முனியப்பன், கருப்பு சாமி, முஸ்லீம் அமைப்புகளில் அபுதாகீர், முகமது இஸ்மாயில், முகமது இக்பால், விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழ்முத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தாராபுரத்தில் அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம் டி.எஸ்.பி மந்திரமூர்த்தி தலைமையில் நடந்தது. இதில் இன்ஸ்பெக்டர்கள் இளமுருகன், கிருஷ்ணசாமி மற்றும் அனைத்துக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.