Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பாளையில் வரி செலுத்தாத வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு 27ம் தேதி முதல் ஜப்தி நடவடிக்கை

Print PDF

தினகரன் 24.09.2010

பாளையில் வரி செலுத்தாத வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு 27ம் தேதி முதல் ஜப்தி நடவடிக்கை

நெல்லை, செப்.24: பாளையில் வரி கட்டாத 4 வீடுகளில் நேற்று குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. நெல்லை மாநகராட்சிக்கு கோடிக்கணக்கில் வரிபாக்கி உள்ளது. பல வர்த்தக நிறுவனங்களும், கடைகளும் ஆண்டுக்கணக்கில் வரிபாக்கியை செலுத்தாமல் ஏமாற்றி வருகின்றன. மாநகராட்சி வரிவசூல் வாகனம் மூலம் தீவிர வரிவசூல் முகாம் ஒவ்வொரு பகுதியாக நடத்தப்பட்டாலும், சிலர் அதற்கு டிமிக்கி கொடுத்து வருகின்றனர். இதுகுறித்து புகார்கள் மாநகராட்சி கமிஷனர் சுப்பையனுக்கு சென்றன.

கமிஷனர் உத்தரவின் பேரில் ஒவ்வொரு மண்டலத்திலும் கடந்த 5 ஆண்டுகளாக சொத்து வரி, குடிநீர் வரி செலுத்தாதவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாளை மண்டத்தில் உதவி கமிஷனர் பாஸ்கர் உத்தரவின் பேரில் நேற்று உதவி வருவாய் அலுவலர் வெங்கட்ராமன் தலைமையில் வரிபாக்கியை வசூலிக்க ஒரு குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில் வருவாய் உதவியாளர்கள் கருணாகரன், அனந்த கிருஷ் ணன், முத்துகிருஷ்ணன், வடிவேல் முருகன் ஆகியோர் இடம்பெற்றனர்.

இக்குழுவினர் நேற்று பாளை திருச்செந்தூர் சாலை, வி.எம்.சத்திரம் ஆகிய இடங்களில் வரிபாக்கி செலுத்தாத 4 வீடுகளில் குடிநீர் இணைப்புகளை துண்டித்தனர். சில கடைகளின் உரிமையாளர்கள் உடனடியாக சொத்து வரியை செலுத்த முன்வந்தனர். ‘மாநகராட்சி பகுதியில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக வரிபாக்கி செலுத்தாமல் இருப்பவர்கள் வரும் 26ம் தேதிக்குள் வரிசெலுத்த வேண்டும். அதன்பின் கடைகளிலும், வணிக நிறுவனங்களிலும் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்என கமிஷனர் எச்சரித்துள்ளார்.