Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நெல்லையில் மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சுவோர் மீது நடவடிக்கை

Print PDF

தினகரன் 24.09.2010

நெல்லையில் மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சுவோர் மீது நடவடிக்கை

நெல்லை, செப். 24: நெல்லை யில் மோட்டார் மூலம் குடி நீர் உறிஞ்சுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். நெல்லை மாநகராட்சி பகுதியில் நாளுக்குநாள் குடிநீர் பிரச்னை அதிகரித்து வருகிறது. பாளை, என்.ஜி.. காலனி, அன்புநகர், மேலப்பாளையம், வண்ணார்பேட்டை, தச்சநல்லூர் பகுதிகளில் குடிநீர் கிடைக்காமல் மக்கள் திண்டாடி வருகின்றனர்.

வாரத்திற்கு ஒருமுறை அல்லது 2 தடவை மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது. தண்ணீர் சரியாக வராததால் பெரும்பாலானோர் வீடுகளில் மோட்டார் மூலம் தண்ணீரை உறிஞ்சுகின்றனர். இதனால் அருகில் உள்ளவர்களுக்கு தண்ணீர் கிடைப்பதில்லை. இதுகுறித்து மாநகராட்சிக்கு பல்வேறு புகார்கள் வந்தன. மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க ஆணையர் சுப்பையன் உத்தரவிட்டார். அதன்பேரில் 4 மண்டலங்களிலும் உதவி செயற்பொறியாளர்கள் தலைமையில் ஊழியர்கள் சென்று மோட்டார்களை பறிமுதல் செய்கின்றனர்.

மேலும் அந்த வீடுகளின் இணைப்புகளும் துண்டிக்கப்படுகின்றன. இருப்பினும் மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சுவது குறைந்தபாடில்லை. மாநகராட்சி தலைமை பொறியாளர் ஜெய்சேவியர் கூறும் போது, ''மாநகராட்சி பகுதியில் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. குடிநீர் பிரச்னையை தீர்ப்பதற்காக 19 முதல் 26 வரையிலான வார்டுகளில் ரூ.17 கோடியில் புதிய குடிநீர் தொட்டி அமைக் கும் பணி நடந்து வருகிறது. வண்ணார்பேட்டை ராமலிங்கமுதலியார் தெரு, குறிச்சி போன்ற பகுதிகளி லும் குடிநீர் தொட்டிகள் அமைக்கப்படுகின்றன.

என்.ஜி.. காலனியில் 60 ஆயிரம் லிட்டர் கொள் ளளவு கொண்ட குடிநீர் தொட்டி உள்ளது. புதிய விரிவாக்க பகுதியால் மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப குடிநீர் சப்ளை செய்ய முடியவில்லை. எனவே லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்கிறோம்.

50 ஆண்டுகளுக்கு முன் பதிக்கப்பட்ட குழாய்கள் பழுதடைந்துள்ளதால் அவற்றை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புதிய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டால் குடிநீர் பிரச்னை இருக்காது. பொதுமக்கள் மோட்டார் மூலம் தண்ணீரை உறிஞ்சக் கூடாது.

குடிநீர் உறிஞ்சுவோர் குறித்து புகார் தெரிவிக்க மாநகராட்சியில் '1800' என்ற இலவச தொலைபேசி வசதி செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர 4 மண்டல உதவி செயற்பொறியாளர்களுக்கும் தகவல் தெரிவிக்கலாம். நெல்லை மண்டலம் 94422&01305, தச்சநல்லூர் 94422&01301, பாளையங்கோட்டை 94422&01304, மேலப்பாளையம் 94422& 01307. பொதுமக்கள் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறோம்'' என்றார்.