Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

புதுவை மார்க்கெட் கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

Print PDF

தினகரன் 28.09.2010

புதுவை மார்க்கெட் கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

புதுச்சேரி, செப். 28: புதுவை மாநிலத்தில் 50 மைக்ரானுக்கு குறைவான எடை யுள்ள பை, தட்டு, கப் போன்ற பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த சில நாட்களுக்கு முன்பு அரசு தடை விதித்தது. ஆனால் மெல்லிய பிளாஸ் டிக் பொருட்கள் பயன்பாடு தொடர்ந்து கொண்டே தான் இருந்தது.

இந்நிலையில் புதுவை பெரிய மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகளில் 50 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதாக வருவாய்த்துறைக்கு புகார் வந்தது. அதன்படி, புதுச்சேரி தாசில் தார் தில்லைவேல் தலைமை யில் தேசிய அறிவியல் சுற்றுச்சூழல் துறை அதிகாரி ரமேஷ், துணை தாசில்தார் சிவசங்கரன் மற்றும் நக ராட்சி அதிகாரிகள் பெரிய மார்க்கெட்டில் உள்ள கடை களில் அதிரடி சோதனை நடத்தினர். மொத்தமுள்ள 394 கடைகளில் சோதனை செய்ததில் 200க்கும் மேற்பட்ட கடைகளில் தடை மீறி 50 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தியது கண்டறியப்பட்டது. அந்த பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தாசில்தார் தில்லைவேலிடம் கேட்டபோது, `பெரிய மார்க்கெட் பகுதி யில் உள்ள கடைகளில் சோதனை நடத்தியதில் 50 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தியது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்துள்ளோம். பிளாஸ்டிக் பைகளுக்குப் பதிலாக துணி, காகிதப் பைகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளோம். மெல்லிய பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளோம். இதுபோல் நகரின் எல்லா பகுதிகளிலும் கடைகளில் சோதனை நடத்தப்படும். தடை மீறி பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத் தும் கடைக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்என்றார். அதிகாரிகளின் இந்த அதிரடி சோதனையால் பெரியமார்க்கெட் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.