Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி அனுமதி கட்டாயம் தூத்துக்குடியில் டிஜிட்டல் பேனர்கள் வைக்க கட்டுப்பாடு

Print PDF

தினகரன் 04.10.2010

மாநகராட்சி அனுமதி கட்டாயம் தூத்துக்குடியில் டிஜிட்டல் பேனர்கள் வைக்க கட்டுப்பாடு

தூத்துக்குடி, அக். 4: தூத்துக் குடி நகர்பகுதியில் மாநகராட்சி அனுமதி பெற்ற பிறகே டிஜிட்டல் பேனர்கள் வைக்க வேண்டும் என ஏஎஸ்பி சோனல்சந்த்ரா தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் டிஜிட் டல் பேனர்கள் வைத்தல் தொடர்பாக தென்பாகம் காவல் நிலையத்தில் ஏஎஸ்பி சோனல்சந்த்ரா அனைத்து கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார்.

அவர் தெரிவித்ததா வது:

தூத்துக்குடி நகரில் முக்கிய வீதிகளில் அனுமதியின்றி வைக்கப்படும் டிஜிட்டல் பேனர்களால் போக்குவரத்து நெருக்கடி உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகின்றன. அவற்றை ஒழுங்கு செய்யப்பட வேண்டியுள்ளது. விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் பேனர்கள் உடனடியாக அகற்றப்படும்.

அக்.11 முதல் தூத்துக் குடி நகருக்குட்பட்ட பகுதிகளில் டிஜிட்டல் பேனர்கள் வைக்க விரும்புபவர்கள் கண்டிப்பாக மாநகராட்சியில் முறையாக அனுமதி பெறவேண்டும். திருமணம் உள்ளிட்ட விழாக்களுக்காக டிஜிட்டல் பேனர்கள் வைப்பவர்கள் அவர்கள் பகுதிக்குட்பட்ட இடங்களில் மட்டுமே வைக்க வேண்டும். விழாவுக்கு 2 நாள் முன்பும், பின்னர் இருநாட்கள் மட்டுமே அவை இருக்கவேண்டும். கோயில் விழாக் கள் மற்றும் அரசியல் நிகழ்ச்சிகளுக்கும் இது பொருந்தும் என்றார்.

இதில் திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், நகர செயலாளர்கள் அதிமுக ஏசாதுரை, இந்திய கம்யூனிஸ்ட் ஞானசேகரன், மதிமுக மாடசாமி, சமக அற்புதராஜ், மாணவர் காங்கிரஸ் துணைத்தலைவர் ஜெயக்குமார், பாமக மாவட்ட தலைவர் மாரிச்செல்வன், இன்ஸ்பெக்டர்கள் பிரான்சிஸ், ஜெயப்பிரகாஷ், சப்&இன்ஸ்பெக்டர்கள் ஆபிரகாம்குரூஸ், தனிஸ்லாஸ்பாண்டி, ரமேஷ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

அக். 11 முதல் அமல்

தூத்துக்குடி நகர்பகுதிகளில் டிஜிட்டல் பேனர்கள் வைப்பது தொடர்பாக ஏஎஸ்பி சோனல்சந்த்ரா கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.