Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பழுதடைந்த சாலை,​​ கால்வாயில் கழிவுநீர் கலப்பு:​ ​ உடனடியாக சரி செய்ய மேயர் உத்தரவு

Print PDF

தினமணி 06.10.2010

பழுதடைந்த சாலை,​​ கால்வாயில் கழிவுநீர் கலப்பு:​ ​ உடனடியாக சரி செய்ய மேயர் உத்தரவு

மதுரை,அக்.5: ​ ​ பழுதடைந்த மதுரை பூந்தமல்லி நகர் சாலையையும்,​​ முல்லைநகர் கால்வாயில் ​ கழிவுநீர் கலப்பதையும்,​​ நேரில் பார்வையிட்ட மேயர் கோ.​ தேன்மொழி,​​ அவற்றை ​ உடனடியாகச் சீரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். ​ மதுரை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் 1 முதல் 21 வார்டுகள் வரையிலான ​ பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.​ ​

​ இதில் மேயர் தேன்மொழி,​​ துணைமேயர் பி.எம்.மன்னன்,​​ மாநகராட்சி ஆணையர் ​ எஸ்.​ செபாஸ்டின் ஆகியோர் பங்கேற்று மனுக்களை ஆய்வு செய்தனர்.​ ​ ​ இதில்,​​ பெறப்பட்ட 35 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க மேயர் உத்தரவிட்டார்.

​ ​ முன்னதாக,​​ 19-வது வார்டு பூந்தமல்லி நகர் பகுதியில் பழுதடைந்த சாலையைப் பார்வையிட்டு அதனை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ​ மேலும்,​​ 2-வது வார்டு முல்லைநகர் கால்வாயில் ஆனையூர் பகுதியிலிருந்து வருகிற கழிவுநீர் கலப்பதாகப் புகார்கள் தெரிவிக்கப்பட்டன.​ இதையடுத்து அப்பகுதிக்குச் சென்று பார்வையிட்ட மேயர் சரி செய்யுமாறு உத்தரவிட்டார்.

​ 7-வது வார்டில் மாநகராட்சி சுகாதார வளாகத்தில் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலவச மருத்துவ முகாமை மேயர் தொடக்கி வைத்தார்.​​ நிகழ்ச்சிகளில் மண்டலத் தலைவர் க.​ இசக்கிமுத்து,​​ மாநகர் மன்ற உறுப்பினர்கள் ​ நல்லகாமன்,​​ நீலமேகம்,​​ சந்திரன்,​​ தலைமைப் பொறியாளர் கே.​ சக்திவேல்,​​ நகர்நல ​ அலுவலர் சுப்பிரமணியன்,​​ கண்காணிப்புப் பொறியாளர் ஆர்.​ விஜயகுமார்,நகரமைப்பு ​ அலுவலர் முருகேசன்,​​ உதவி ஆணையர் ​(வடக்கு )​ ராஜகாந்தி,மக்கள் தொடர்பு அலுவலர் இரா.பாஸ்கரன் ஆகியோர் உடன் சென்றனர்.