Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திண்டுக்கல்லில் பன்றிகள் முற்றிலும் ஒழிக்கப்படும் நகர்மன்ற தலைவர் தகவல்

Print PDF

தினகரன் 07.10.2010

திண்டுக்கல்லில் பன்றிகள் முற்றிலும் ஒழிக்கப்படும் நகர்மன்ற தலைவர் தகவல்

திண்டுக்கல், அக். 7: திண்டுக்கல் நகரில் சுற்றித்திரியும் பன்றிகள் முற்றிலுமாக ஒழிக்கப்படும் என நகர்மன்ற தலைவர் நடராஜன் தெரிவித்தார்.

திண்டுக்கல் நகரில் கொசுக்களை ஒழிக்க பொது சுகாதாரதுறை சார்பில் ரூ.12லட்சம் மதிப்பில் (புகை தெளிப்பான்) கொசு ஒழிப்பு இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தை நேற்று நகர்மன்ற தலைவர் நடராஜன் இயக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் லெட்சுமி, நகர்நல அலுவலர் வரதராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின் செய்தியாளர்களிடம் நகர்மன்ற தலைவர் நடராஜன் கூறுகையில், "புதியதாக வழங்கப்பட்டுள்ள கொசு ஒழிப்பு இயந்திரம் மூலம் தினமும் 4 வார்டுகள் வீதம் 20 நாட்களுக்கு கொசு மருந்து தெளிக்கப்படும். இதற்கு தினமும் 120 லிட்டர் டீசலும், 6 லிட்டம் மருந்தும் வழங்கப்படுகிறது. அதேபோல் நகர் பகுதியில் சுற்றித்திரியும் பன்றிகள் முற்றிலுமாக ஒழிக்கப்படும்.

கடந்த 5 நாட்களில் நகராட்சி ஊழியர்கள் 50 பன்றிகளுக்கு மேல் பிடித்துள்ளனர். அவைகள் மீண்டும் திண்டுக்கல் நகருக்குள் வராத வகையில் மலை பகுதியில் விடப்பட்டுள்ளது. இந்த பணி தொடந்து நடைபெறும்Ó என்றார்.