Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

6 ஆயிரம் நிறுவனத்துக்கு நோட்டீஸ் வரி கட்டாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

Print PDF

தினகரன் 22.10.2010

6 ஆயிரம் நிறுவனத்துக்கு நோட்டீஸ் வரி கட்டாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

ஈரோடு, அக். 22: ஈரோடு மாநகராட்சி சார்பில் நடப்பாண்டில் வரியினங்களை செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் உயர்த்தப்பட்ட தொழில்வரியை கட்ட 6 ஆயிரம் வர்த்தக நிறுவனங்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாநகராட்சிக்கு 2010&11ம் ஆண்டிற்கு செலுத்த வேண்டிய வீட்டுவரி, காலியிட வரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம், குத்தகை இனங்கள், உரிமக்கட்டணங்கள் மற்றும் இதர வரியினங்களை உடனடியாக மாநகராட்சி அலுவலகத்தில் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி குடிநீர் இணைப்பு துண்டிப்பு செய்யப்படுவதுடன் ஜப்தி மற்றும் கோர்ட் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சனி, ஞாயிறு ஆகிய விடுமுறை நாட்களிலும் வரி செலுத்தலாம் என்றும் மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மாநகராட்சியின் இந்த அறிவிப்பால் வர்த்தக நிறுவனங்கள் அதிர்ச்சியடைந்துள்ளன. கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த மாநகராட்சி கூட்டத்தில் குடிநீர் கட்டணம் உயர்த்த தீர்மானம் கொண்டு வந்தனர். இதற்கு அனைத்து கட்சி கவுன்சிலர்களும் எதிர்ப்பு தெரிவித்ததால் குடிநீர் கட்டணம் ரத்து செய்யப்பட்டது. அதேபோல சொத்துவரியையும் 500 சதவீதத்திற்கு உயர்த்தி தீர்மானம் கொண்டு வந்தனர். இதற்கும் கவுன்சிலர்களும் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த தீர்மானமும் ரத்து செய்யப்பட்டது. ஆனால் சொத்துவரி உயர்வு தொடர்பாக மாநகராட்சி தீர்மானம் கொண்டு வந்தபோது எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி தொழில்வரியை உயர்த்தியுள்ளதால் வணிகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். உயர்த்தப்பட்ட தொழில்வரியை கட்டகோரி 6 ஆயிரம் தொழில் நிறுவனங்களுக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. தொழில்வரி உயர்வை கைவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

இதுகுறித்து மாநகராட்சி 22வது வார்டு கவுன்சிலர் விஜயபாஸ்கர் கூறுகையில், 1397967985 மாநகராட்சி கூட்டத்தில், தொழில்வரியை 25 முதல் 35 சதவீதம் வரை உயர்த்த வேண்டும் என்று கடந்த 2008ம் ஆண்டு தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது நாங்கள் 25 சதவீதம் மட்டும் உயர்த்தலாம் என்று கூறினோம். 6 மாதத்திற்கு ஒருமுறை 188 ரூபாய் தொழில்வரி இருந்தது. ஆனால் தற்போது இந்த வரியை 938 ரூபாயாக உயர்த்தியுள்ளனர். இந்த வரி உயர்வால் சாதாரண டீக்கடை வைத்துள்ளவர்கள் கூட பாதிக்கப்படுகிறார்கள். பெரிய ஜவுளிக்கடைகளுக்கும், டீக்கடை, பீடாக்கடைகளுக்கும் ஒரே மாதிரியாக தொழில்வரியை விதித்துள்ளனர். எனது பகுதியில் மட்டும் 3 ஆயிரம் கடைகள் உள்ளன. தொழில்வரி உயர்வை ரத்து செய்து விட்டு பழைய வரியையே வசூல் செய்ய வேண்டும்என்றார். இதுதொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது, ‘தொழில்வரியை ஏதும் நாங்கள் உயர்த்தவில்லை.

வணிகவரித்துறையில் தொழில் நிறுவனங்களின் டின் நம்பரை கொண்டு தான் வரி நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு 85 சதவீதம் வசூல் செய்துள்ளோம். தற்போது 6,875 தொழில் நிறுவனங்கள் உள்ளன. இதில் 6 ஆயிரம் பேருக்கு தொழில்வரி செலுத்தகோரி நோட்டீஸ் கொடுத்துள்ளோம்என்றனர்.