Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அனுமதியின்றி இயங்கிய சாயஆலை மூடல்

Print PDF

தினமணி 22.10.2010

அனுமதியின்றி இயங்கிய சாயஆலை மூடல்

திருப்பூர், அக். 21: திருப்பூர், மங்கலம் பிரதான சாலையில் கடைகளுக்கு இடையே, மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியின்றி இயங்கி வந்த சாயஆலையை மாநகராட்சி அலுவலர்கள் மூடியதுடன், அங்கிருந்த ரூ. 25 ஆயிரம் மதிப்புள்ள பின்னலாடைத் துணிகளையும், இயந்திரங்களையும் பறிமுதல் செய்தனர்.

÷திருப்பூர் மாநகராட்சி, 29வது வார்டுக்கு உட்பட்ட மங்கலம் சாலை (அமர்ஜோதி கார்டன் எதிரில்) பழகுடோன் பஸ் நிறுத்தம் பகுதியில் ஏராளமான கடைகள் அமைந்துள்ளன. அங்கிருந்த ஒரு காம்பிளக்சின் 3வது மாடியில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் முறையான அனுமதி பெறாமல் 2 இயந்திரங்கள் வைத்து பின்னலாடைத் துணிகளுக்கு சாயமிடும் ஆலை இயங்கி வந்துள்ளது.

÷இதுகுறித்து 29வது வார்டு மாமன்ற உறுப்பினர் கணேசன் மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் அளித்தார். சுகாதார ஆய்வாளர் சாமிநாதன் உள்ளிட்ட அலுவலர்கள் வியாழக்கிழமை அப் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ÷அப்போது, அங்கிருந்த காம்பிளக்சின் 3வது மாடியில் பூட்டப்பட்டிருந்த ஒரு கடையில் அனுமதியின்றி சாயமிடும் பணிகள் நடைபெற்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அக்கடை திறக்கப்பட்டு, உள்ளே இருந்த ரூ. 25 ஆயிரம் மதிப்புள்ள பின்னலாடைத் துணிகளை பறிமுதல் செய்தனர்.

÷தொடர்ந்து, சாயமிடப் பயன்படுத்திய இயந்திரங்களையும் பறிமுதல் செய்து, அக்கடையை மூடினர். அதிகாரிகளின் திடீர் ஆய்வை அறிந்த சாய ஆலை உரிமையாளர் தலைமறைவாகி விட்டார். அவர் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.