Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வீடுகளில் குடிநீர் மீட்டர் பொருத்துதல், கட்டண பில் அனுப்பும் பணி டாடா நிறுவனத்திடம் ஒப்படைப்பு

Print PDF

தினகரன்                  28.10.2010

வீடுகளில் குடிநீர் மீட்டர் பொருத்துதல், கட்டண பில் அனுப்பும் பணி டாடா நிறுவனத்திடம் ஒப்படைப்பு

புதுடெல்லி, அக். 28: குடிநீர் கட்டண பில் அனுப்பும் பணி, வீடுகளில் மீட்டர் பொருத்துதல் ஆகிய பணிகளை டிசிஎஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்க குடிநீர் வாரியம் முடிவு செய்துள்ளது.

டெல்லி குடிநீர் வாரிய அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் முதல்வர் ஷீலா தீட்சித் தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்தில் குடிநீர் வாரிய தலைமைச் செயல் அலுவலர் ரமேஷ் நேகி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

குடிநீர் வாரியத்தின் பணிகளை சீரமைக்கும் விதமாக, குடிநீர் கட்டணத்துக்கான பில் அனுப்பும் பணிகள், மீட்டர் பொருத்தும் பணிகளை ஐ.டி. நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீஸஸ் நிறுவனத்திடம் ஒப்படைப்பது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்துக்குப்பிறகு, தலைமைச் செயல் அலுவலர் ரமேஷ் நேகி கூறியதாவது:

குடிநீர் கட்டண பில்களை நுகர்வோர்களுக்கு அனுப்புவது உள்ளிட்ட பில் சம்பந்தமான பணிகளை டி.சி.எஸ்.சிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான மென்பொருளை டி.சி.எஸ். தயாரிக்கும். இந்த புதிய முறை 9 மாதங்களுக்குள் செயல்பாட்டுக்கு வந்து விடும்.

இப்போதுள்ள கட்டணத்துக்கான பில் வழங்கும் முறையில் பல்வேறு குளறுபடிகள் நடக்கின்றன.

கம்யூட்டர் அடிப்படையிலான புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துவதன்மூலம் குளறுபடிகள் நிவர்த்தி செய்யப்படுவதோடு, குடிநீர் வாரியத்தின் வருவாயும் அதிகரிக்கும். இந்த புதிய முறையின் மூலம் நுகர்வோர்கள் ஆன்லைனிலேயே குடிநீர் கட்டணத்தை செலுத்த முடியும்.

இதுதவிர, குறிப்பிட்ட குடியிருப்புப் பகுதிகளில் 2.5 லட்சம் குடிநீர் மீட்டர்களை பொருத்தும் பணியிலும் டிசிஎஸ். நிறுவனத்தை ஈடுபடுத்த முடிவு ªய்யப்பட்டுள்ளது.

அதன்பிறகு, மீட்டர் பொருத்தப்படாத வளாகங்களில் மீட்டர் பொருத்தும் பணிகள் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளுக்கு மீட்டரை பராமரிக்க வேண்டிய பொறுப்பு சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தைச் சாரும்.

லாரியில் குடிநீர் சப்ளை செய்யும் பணிகளிலும் மண்டலவாரியாக தனியார் நிறுவனங்களை ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முதலாவதாக, ஒரு குறிப்பிட்ட மண்டலத்தில் தனியார்வசம் லாரி குடிநீர் சப்ளை பணி ஒப்படைக்கப்படும்.

இதுதவிர, குடிநீர் சப்ளை செய்யும் லாரிகளில் ஜி.பி.எஸ். கருவிகளை பொருத்தவும் முடிவு செய்துள்ளோம்.

அதன்மூலம் லாரிகளின் நடமாட்டத்தை குடிநீர் வாரியத்திலிருந்து எளிதில் கண்டுபிடிக்க முடியும்.

குறிப்பிட்ட நேரத்துக்குள் சென்று குடிநீரை சப்ளை செய்யாத லாரி தவறினால், அதன் உரிமையாளருக்கு ரூ10

ஆயிரம் வரை அபராதம் விதிப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ரமேஷ் நேகி கூறினார்.

மகிபால்பூர், ரான்பூரி, ரஜோரி, ஸ்மல்கான், கபஷேரா கிராமங்கள் ஆகியவற்றில் கழிவுநீர் குழாய்களை பொருத்துவதற்காக ரூ18.96 கோடி திட்டத்துக்கும், ராம்லீலா மைதானத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரூ19.04

கோடி செலவில் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிக்கும் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதுதவிர, வாரிய ஊழியர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

காமன்வெல்த் போட்டியின்போது தங்கு தடையற்ற முறையில் குடிநீர் விநியோகித்ததற்காக வாரிய அதிகாரிகளை முதல்வர் பாராட்டினார்.