Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சினால் நடவடிக்கை நகராட்சி தலைவர் எச்சரிக்கை

Print PDF

தினகரன்                29.10.2010

மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சினால் நடவடிக்கை நகராட்சி தலைவர் எச்சரிக்கை

கும்பகோணம், அக்.29: மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என குடந்தை நகராட்சி தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குடந்தை நகர¢மன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் தமிழழகன் தலைமை வகித் தார். துணைத்தலைவர் தர்மபாலன், பொறியாளர் கனகசுப்புரத்தினம், மேலாளர் லட்சுமிநாராயணன் மற் றும் நகர¢மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்கள் வருமாறு:

ராஜாநடராஜன்(அதிமுக): பாட்ராச்சாரியார் தெரு கிருஷ்ணன் கோயில் அருகே ரூ10லட்சத்திற்கு சாலை பணி தொடங்கப்பட்டு பாதி யில் நிறுத்தப்பட்டுள்ளது. மழை நீர் குளம்போல் தேங்கி காட்சி தருகிறது.

பொறியாளர்: ஒப்பந்தகாரரிடம் கூறியாகிவிட்டது. இரண்டு நாளில் சீரமைக்கப்படும்.

கிருஷ்ணமூர்¢த்தி(திமுக): காலை 8மணி முதல் 12மணிவரையிலும், மாலை 5மணி முதல் 8மணி வரையிலும் மடத்துத்தெருவில் போக்குவரத்து நெருக்கடி உள்ளது. எனவே கனரக வாகனங்கள் நகருக்கு வருவதற்கு தடைசெய்வதுடன், பள்ளி மாணவர்கள், அலுவலகம் செல்வோருக்கு இடையூறாக இல்லாமல் போக்குவரத்து நெருக்கடியை குறைக்கவேண்டும். மடத்து தெருவில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

தலைவர் : தீபாவளி பண்டிகை முடிந்ததும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.

பீட்டர்பிரான்சிஸ்(பா..): கும்பகோணம் நகரில் இரண்டு வேளையும் எப்போது தண்ணீர் வரும்?

தலைவர்: கொள்ளிடத்தில் போதிய தண்ணீர் இல்லை. தீபாவளியை முன்னிட்டு முதல் நாளும், தீபாவளி அன்றும் தேவையான அளவிற்கு தண்ணீர் வ¤நியோகம் செய்யப்படும்.

துளசிராமன்(அதிமுக) : 34 வார்டில் கீழத்தெரு, துவரங்குறிச்சி, நடுத்தெரு பகுதியில் ஒரு வேளைகூட தண்ணீர் வராமல் உள்ளது.

ராஜாராமன்(திமுக): நகரில் சிலர் மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சுகிறார்கள் என தெரியவருகிறது.

தலைவர்: மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

லட்சுமிநாராயணன்(காங்கிரஸ்): ஓலைப்பட்டிணம் வாய்க் கால் தூர¢ வாரியதற்கு காண்டிராக்டருக்கு பணம் கொடுக்கவில்லை என்ப தால் ஜப்தி செய்ய கோர்ட் ஊழியர்கள் வந்ததாக செய்திகள் வந்துள்ளன.

கடந்த கூட்டத்தில் உயர்நீதிமன்றத்தில் இவ்வழக்கிற்கு மேல் முறையீடு செய்ய நிதி ஒதுக்கப்பட்டதே அதன் விவரம் என்ன?

மேலாளர்: உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்கு நாளை (இன்று 29ம்தேதி) வருகிறது.

இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

கூட்டத்தில் ரூ24.20 லட்சத்தில் பல்வேறு பணி கள் மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.