Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சென்னையில் விதிமீறல் கட்டடங்கள் குறித்து அறிக்கை அளிக்க நீதிமன்றம் உத்தரவு

Print PDF

தினமணி                 29.10.2010

சென்னையில் விதிமீறல் கட்டடங்கள் குறித்து அறிக்கை அளிக்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை, அக். 28: சென்னையில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்கள் குறித்தும், அவற்றை இடிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அறிக்கை அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

÷சென்னையைச் சேர்ந்த பப்ளிக் சாலமன் என்பவர் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்கள் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார்.

÷இந்த வழக்கு தொடர்பாக தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:

÷சென்னையில் விதிமுறைகளை மீறி கட்டடங்கள் கட்டப்படுவதால் குடிநீர் வசதியைப் பெறுவதிலும். கழிவு நீரை வெளியேற்றும் வசதியிலும் சிக்கல் உள்ளது என்று சென்னை மாநகராட்சிக்கு மனு செய்யப்பட்டுள்ளது.

÷அப்போது இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட கட்டட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று 4.12.2009-ல் மாநகராட்சி பதில் அளித்துள்ளது. எனினும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

÷எனவே, விதிமுறைகளை மீறி எழுப்பப்பட்டுள்ள கட்டடங்கள் தொடர்பான அறிக்கையை நவம்பர் 12-ம் தேதி அல்லது அதற்கு முன்பாக நீதிமன்றத்தில் அளிக்க வேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.