Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடியிருப்பு பகுதிகளில் பன்றி வளர்த்தால் வழக்கு நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை

Print PDF

தினகரன்               04.11.2010

குடியிருப்பு பகுதிகளில் பன்றி வளர்த்தால் வழக்கு நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை

பொள்ளாச்சி, நவ 4: பொள் ளாச்சி நகரில் குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில் பன்றி வளர்ப்போர் மீது சுகாதாரச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என்று நகராட்சி ஆணை யாளர் மற்றும் நகர்நல அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ள னர்.

பொள்ளாச்சி நகரில் மரப்பேட்டை, பொட்டு மேடு, கண்ணப்பன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பலர் அதிகளவிலான பன்றிகளை வளர்த்து வருகின்றனர். பன்றிகள் இரவு நேரங்களில் மட்டுமே அடைத்து வைக்கப்படுகின்றன.

பகல் நேரங்கள் முழுவதிலும் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து அசுத்தத்தை ஏற்படுத்தி வந்ததால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். மேலும் சுகாதாரக் கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவத் துவங்கியதால் பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் புகார் செய்தனர். இதனையடுத்து நகரில் பன்றி வளர்ப்போருக்கு முதற்கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளில் பன்றிகளை வளர்ப்போருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதன் காரணமாக சில மாதங்கள் குடியிருப்பு பகுதிகளில் பன்றி வளர்ப்பது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மீண்டும் நகரின் பல இடங்களில் குறிப்பாக குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில் அதிகளவிலான பன்றிகள் வளர்க்கப்படுகின்றன. இப்பிரச்னைக்கு உடனே தீர்வு காண வேண்டும் என்று கவுன்சிலர்களும், பொதுமக்களும் நகராட்சி நிர்வாகத்திடம் புகார் செய்தனர்.

ஆகவே நகரில் குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில் பன்றி வளர்ப்போர் மீது வழக்கு தொடுக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்து அறிக்கை விடுத்துள்ளது.

நகராட்சி ஆணை யாளர் பூங்கொடி அருமைக்கண், நகர்நல அலுவலர் குணசேகரன் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில், நகராட்சிக்குட்பட்ட நல்லிகவுண்டர் லே அவுட், குமரன் நகர், கண்ணப்பன் நகர், மரப்பேட்டை, பொட்டு மேடு, கோட்டாம்பட்டி உள்ளிட்ட பொதுமக்கள் நெருக்கமாக வசிக்கும் பகுதிகளில் சுற்றித் திரியும் பன்றிகளால் சுகாதாரக் கேடு ஏற்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன.குடியிருப்புகள் நிறைந்த எந்த ஒரு பகுதிகளிலும் பன்றிகள் வளர்க்கக் கூடாது என்று பலமுறை எச்சரிக்கப்பட்டுவிட்டது.

ஆனாலும் இதனை சிலர் கண்டுகொள்ளாமல் அதிகளவிலான பன்றி களை வளர்த்து வருகின்றனர்.

ஆகவே எந்தெந்த பகுதிகளில் பன்றிகள் வளர்க்கப்படுகின்றன, அவற்றை வளர்ப்பவர்கள் யார் என்பது குறித்த விபரங்கள் சேகரிக்கும் பணி நடைபெற்று வரு கிறது.

இனிமேலும் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் விதத்தில் பன்றிகள் வளர்ப்பது கண்டு பிடிக்கப்பட்டால் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்தப்படுவதுடன், பன்றி வளர்ப் போர் மீது தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டத்தின் கீழ் கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்படும் என் றும் எச்சரிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.