Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ3,000 லஞ்சம் வாங்கினார் மாநகராட்சி அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை

Print PDF

தினகரன்                 08.11.2010

ரூ3,000 லஞ்சம் வாங்கினார் மாநகராட்சி அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை

புதுடெல்லி,நவ.8: பணியை நிரந்தரமாக்க ரூ3,000 லஞ்சம் வாங்கிய மாநகராட்சி சுகாதார துறை அதிகாரிக்கு சிறப்பு நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

டெல்லியைச் சேர்ந்தவர் ஜெய்பால். மாநகராட்சி சுகாதார துறையில் துப்புரவு பணியாளராக அவரது மனைவி வேலை பார்த்து வந்தார். அவரது பணியை நிரந்தரம் ஆக்குவதற்காக உயர் அதிகாரிகளை சந்தித்து ஜெய்பால் கோரிக்கை விடுத்தார்.

பணியை நிரந்தரம் செய்ய வேண்டுமானால் 5,000 ரூபாய் தரவேண்டும் என்று சுகாதாரத்துறையின் உயர் அதிகாரியான குப்தா கேட்டார். இதுபற்றி சிபிஐயிடம் ஜெய்பால் புகார் செய்தார்.

அவர்களின் ஆலோசனையின்படி திரிலோக்புரியில் உள்ள குப்தாவின் அலுவலகத்துக்கு ஜெய்பால் சென்றார். சிபிஐ போலீசார் கொடுத்தனுப்பிய 3,000 ரூபாயை குப்தாவிடம் கொடுத்தார்.அதை அவர் பிரிஜ்பால் என்பவரிடம் கொடுக்கச் சொன்னார். அதன்படி ஜெய்பால் கொடுத்ததும் அதை வாங்கிய பிரிஜ்பால் உடனடியாக அந்தப் பணத்தை குப்தாவிடம் கொண்டு சென்று கொடுத்தார்.

அப்போது அங்கு மறைந்து இருந்த சிபிஐ போலீசார் விரைந்து சென்று பிரிஜ் பாலையும் குப்தாவையும் கைது செய்தனர். குப்தாவிடம் இருந்த லஞ்சப்பணத்தையும் அவர்கள் பறிமுதல் செய்தனர். இதுபற்றி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை சிறப்பு நீதிமன்ற நீதிபதி வி.கே. மகேஸ்வரி விசாரித்து குப்தாவுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் ரூ15,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிரிஜ்பால் மீதான குற்றச்சாட்டு ஆதாரத்துடன் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி, அவரை விடுதலை செய்து நீதிபதி தீர்ப்பளி