Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மெரீனாவில் பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தினால் 100 அபராதம்: மேயர் மா. சுப்பிரமணியன்

Print PDF

தினமணி            10.11.2010

மெரீனாவில் பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தினால் 100 அபராதம்: மேயர் மா. சுப்பிரமணியன்

சென்னை, நவ.9: சென்னை மெரீனா கடற்கரையில் பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தினால் 100 அபராதம் வசூலிக்கப்படும் என்று சென்னை மாநகர மேயர் மா. சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

சென்னை மெரீனாவில் புல்வெளிகளை தூய்மைப்படுத்துவதையும், பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதையும் மேயர் மா. சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியது:

சென்னை மெரினா கடற்கரை, நடைபாதைகள், புல்வெளிகள், அலங்கார மின் விளக்குகள், 14 இடங்களில் அமர்வு இடங்கள், நீருற்றுகள் என 26 கோடியில் அழகுப்படுத்தப்பட்டுள்ளது.

இதைப் பராமரிக்க தூய்மைப் பணியாளர்கள், சாலைப் பணியாளர்கள், தோட்டப் பணியாளர்கள், மின் பணியாளர்கள், தனியார் பாதுகாவலர்கள் என 149 பேர் நாள்தோறும் பணியாற்றுகின்றனர்.

மெரீனா நீச்சல் குளத்தை மேம்படுத்தும் பணிகள் ஒரு மாதத்தில் முடிக்கப்படும். மெரீனாவில் வியாபாரிகளும், பொதுமக்களும் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இதுதொடர்பாக, பல்வேறு இடங்களில் விளம்பரப் பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன.

அதன்பிறகும், பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தினால் 100 அபராதம் விதிக்கப்படும் என்றார் மேயர் மா.சுப்பிரமணியன்.