Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி கார் பதிவுக்கு அபராதம்: தவறு செய்தவர்களிடம் வசூலிக்க வலியுறுத்தல்

Print PDF

தினமணி                    11.11.2010

மாநகராட்சி கார் பதிவுக்கு அபராதம்: தவறு செய்தவர்களிடம் வசூலிக்க வலியுறுத்தல்

சேலம், நவ. 10: சேலம் மாநகராட்சிக்குச் சொந்தமான காரைப் பதிவு செய்யத் தவறியதால் அதற்கு அபராதம் விதிக்கப்பட்டது. இத் தவறைச் செய்த அதிகாரிகளிடமே அபராதத் தொகையை வசூலிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

÷இது குறித்து கட்சியின் மாவட்டச் செயலர் ஆர்.வேங்கடபதி வெளியிட்டுள்ள அறிக்கை:

÷சேலம் மாநகராட்சி மேயருக்கு கடந்த 2007-ம் ஆண்டு கார் வாங்க முடிவு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி வாங்கப்பட்ட காரை வேளாண்மைத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பயன்படுத்தி வந்தார். இந்த நிலையில் அந்த கார் கடந்த 3 ஆண்டுகளாக வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யப்படாமலேயே இயக்கப்பட்டது.

÷இது குறித்த தகவல் அண்மையில் வெளியே வந்தது. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் திங்கள்கிழமை அந்த காரை பதிவு செய்யச் சென்றனர். மூன்று ஆண்டுகளாகப் பதிவு செய்யாமல் இருந்ததற்காக ரூ. 68 ஆயிரம் மாநகராட்சிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த பணத்தை மக்களின் வரிப் பணத்தில் இருந்து செலுத்தியுள்ளனர்.

÷ஆனால் இந்தத் தவறுக்குக் காரணமான மாநகராட்சி மேயர், ஆணையர், வேளாண் அமைச்சர், மூன்று ஆண்டுகளாக ஒரு காரை பதிவு செய்யாமல் இயக்க அனுமதித்த சேலம் மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஆகியோரிடம் இந்த அபராதத் தொகையை வசூலிக்க வேண்டுமே தவிர, மக்கள் பணத்தை வீணடிக்கக் கூடாது.

எனவே, இந்த விவகாரத்தில் உடனடியாக அரசு தலையிட்டு தவறுக்குப் பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் பணத்தைத் திரும்பப் பெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.