Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அடுத்த ஆண்டு முதல் குப்பைகளை வீதியில் கொட்டினால் அபராதம்

Print PDF

தினகரன்              20.11.2010

அடுத்த ஆண்டு முதல் குப்பைகளை வீதியில் கொட்டினால் அபராதம்

நாகர்கோவில் நவ. 20: குமரி மாவட்ட நேரு யுவகேந்திரா சார்பில் தேசிய ஒருமைப்பாட்டு முகாம் கன்னியாகுமரியில் நடந்து வருகிறது. இதன் தொடக்க விழாவில் நேரு யுவகேந்திரா மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வரவேற்றார். கலெக்டர் ராஜேந்திர ரத்னூ குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தார். விழாவில் அவர் பேசியதாவது:

தேசிய ஒருமைப்பாட்டுக்கும் , மத நல்லிணகத்துக் கும் நேரு யுவகேந்திராவால் இங்கு நடத்தப்படுகின்ற இந்த முகாம் ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. கன்னியாகுமரி முதல் காஷ் மீர் வரை பல்வேறு மாநிலங் கள் இருந்தாலும் நாம் அனைவரும் இந்தியரே என்பதை இந்த முகாம் வலியுறுத்துகிறது. மேலும் இந்தியாவில் ,பிளாஸ்டிக் மற்றும் கழிவு இல்லாத முதல் மாவட்டமாக கன்னியாகுமரி விளங்க வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சுற்றுபுற சுகாதார மேம்பாட்டில் மக்கள் அனை வரும் கவனம் செலுத்த வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாடு முற்றிலும் ஒழிக்கப்படாவிட்டால் இன்னும் சிறிது காலத்தில் நிலத்தில் தோண்ட தோண்ட பிளாஸ் டிக்தான் வந்து கொண்டிருக்கும். இது பெரிய ஆபத்துக்களை விளைவிக்க கூடி யது. குமரி மாவட்டத்தில் 2011 லிருந்து குப்பைகளை வீதியில் கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். மேலும் ஒருமைப் பாடு,பிளாஸ்டிக் ஒழிப்பு, பூஜ்ய கழிவு மேலாண்மை முதலியவற்றை வலியுறுத்தும் கே டூ கே என்ற கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை என்னும் கலை விழா நடத்தப்படும். என்றார்.

தொடர்ந்து நேரு யுவகேந்திரா நிறுவன தினத்தை முன்னிட்டு பள்ளி , கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட கட்டுரை , பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவி அஜிதா, கோட்டார் கிளை பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் நாகேஷ், திருநெல்வேலி ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பொன்விழா பள்ளி முதல்வர் உஷா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.