Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வரி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் நகராட்சி தலைவர் எச்சரிக்கை

Print PDF

தினகரன்                    23.11.2010

வரி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் நகராட்சி தலைவர் எச்சரிக்கை

பெரம்பலூர், நவ. 23: பெரம்பலூர் நகராட்சியில் தீவிர வரிவசூல் முகாம் மற்றும் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் டிசம்பர் 21ம் தேதி வரை அனைத்து வார்டுகளிலும் நடக்கிறது.

வரி மற்றும் வரியில்லாயினங்கள் வசூல் மற்றும் மக்களின் குறைகளை நிவர் த்தி செய்யும் நேர்காணல் சிறப்பு முகாம் 4வது, 6வது வார்டுக்கு உழவர்சந்தை அருகே நேற்று நடந்தது. முகாமை கலெக்டர் விஜயக்குமார் துவக்கி வைத் தார். ஆணையர் சுரேந்திர ஷா, துணைத்தலைவர் முகுந்தன் முன்னிலை வகித்தனர். நகராட்சி தலைவர் இளையராஜா தெரிவித்ததாவது: 21 வார்டுகளிலும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு தீவிரமாக வரிவசூல் நடைபெறவுள்ளன. சொத்து வரி, குடிநீர்வரி உள்ளிட்ட பல்வேறு வரி வாயிலாக பெரம்பலூர் நகராட்சிக்கு ரூ2 கோடிக்கு மேல் வரவேண்டியுள்ளது. குடிநீர் மட்டுமே ரூ45 லட்சம் வசூலாக வேண்டியுள்ளது. இந்த தொகைகளை வசூலிப்பதற்காகவே சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. வரி செலுத்தாத பயனாளிகள் குடிநீர் இணைப்பு பாரபட்சமின்றி துண்டிக்கப்படும்.

8வது வார்டுக்கு ஆதிபராசக்தி கோயில் பகுதியில் 24ம் தேதி, 11வது வார்டுக்கு கிறிஸ்டியன் நர்சிங் கல்லூரி பகுதியில் 25ம் தேதி, 1வது வார்டுக்கு மதனகோபால சாமி கல்யாண மண்டபத் தில் 26ம் தேதி, 16வது வார் டுக்கு பாத்திமா பள்ளி அரு கே பனிமாதா கோயிலில் 29ம்தேதி சிறப்பு முகாம் நடக்கிறது என்றார்.