Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கோழி கழிவுகளை பொது இடத்தில் கொட்டிய வியாபாரிக்கு அபராதம்

Print PDF

தினகரன்             30.11.2010

கோழி கழிவுகளை பொது இடத்தில் கொட்டிய வியாபாரிக்கு அபராதம்

கூடலூர், நவ.30: தேவர் சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட கல்லிங்கரை பகுதியில் இரவு நேரத்தில் கோழி கழிவுகளை கொட்டி கோழி இறைச்சி வியா பாரியை பிடித்து பேரூ ராட்சி தலைவரிடம் ஒப்படைத்தனர்.

தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இரவு நேரத்தில் கோழி கழிவுகளை கொட்டி செல்வதால் தூர்நாற்றம் வீசவதுடன் சுகாதார சீர்கேடும் ஏற்படுவதாக பொதுமக்கள் சார்பில் பேரூராட்சி நிர்வாகத்திற்கு புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் அடிப்படையில் கோழி இறைச்சி வியாபாரிகளை அழைத்து அவர்களிடம் ஆலோசனை நடத்தி ஒவ்வொரு வியாபாரியும் தனது சொந்த பொறுப்பில் பேரூராட்சிக்கு சுகாதார சீர்கேடு விளைவிக்காத வகையில் அப்புறப்படுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு கல்லிங்கரை பகுதியில் கோழி கழிவுகளை கொட்டிய கூட லூர் 2வது மைல் பகுதியில் கோழி இறைச்சி வியாபாரம் செய்து வரும் அசன் குட்டி என்பவரை பொதுமக்கள் இரவு நேரத்தில் பிடித்து பேரூராட்சி தலைவி கலைச்செல்வி, துணை தலைவர் அனீபா, வார்டு கவுன்சிலர் சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலையில் தேவர் சோலை போலீசிடம் ஒப்படைத்தனர்.

போலீசார் ரூ.500 அபராதம் விதித்தனர். மீண்டும் இதுபோல் நடந்து கொண்டால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து அனுப்பினர். பேரூராட்சி சார்பிலும் ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.