Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

புகார்களுக்கு அதிகாரிகள் செவிசாய்ப்பதில்லை மேயரிடம் வாக்கி டாக்கியை மண்டல தலைவர் ஒப்படைத்தார்

Print PDF

தினகரன்            30.11.2010

புகார்களுக்கு அதிகாரிகள் செவிசாய்ப்பதில்லை மேயரிடம் வாக்கி டாக்கியை மண்டல தலைவர் ஒப்படைத்தார்

நெல்லை, நவ. 30: அதிகாரிகள் புகார்களுக்கு செவிசாய்க்க மறுப்பதாக கூறி தனக்கு வழங்கிய வாக்கி டாக்கியை நெல்லை மாநகராட்சிக் கூட்டத்தில் மண் டல தலைவர் விஸ்வநாதபாண்டியன் மேயரிடம் ஒப்படைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை மாநகராட்சி கூட்டம் மேயர் ஏ.எல். சுப்பிரமணியன் தலைமையில் நேற்று நடந்தது. துணை மேயர் கா. முத்துராமலிங்கம், ஆணையாளர் சுப்பையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் சரமாரியாக புகார் தெரிவித்தனர். அதன் விவரம்:

கவுன்சிலர் தியாகராஜன்: மாநகரப் பகுதிகளில் உள்ள சாலைகளும், பொது கழிப்பிடங்களும் மிகவும் மோசமான நிலை யில் உள்ளன. நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

மேயர்: பொது கழிப்பிடங்களை சீரமைக்க குழு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உள்ளது. சாலைகள் சரி செய்யப்படும்.

டி.எஸ். முருகன்: புதிய குடிநீர் இணைப்புகள் வழங்க கூடாது என மாநகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார். புதிய இணைப்புகள் வழங்கப்பட வேண்டும். காலி மனை தீர்வை ஆறரை வருடங்களுக்கு கட்ட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. புதிதாக நிலம் வாங்கியவர் கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதை நீக்க வேண் டும்.

மேயர்: இதுகுறித்து கலந்து பேசி முடிவெடுக்கப்படும்.

மண்டல தலைவர் விஸ்வநாதபாண்டியன்: மாநகராட்சிக்கு சொந்த மான இடங்களை பலர் ஆக்கிரமித்துள்ளனர். அத னை உடனடியாக மீட்க வேண்டும். மக்கள் பிரச்னைகளை பேசுவதற்காக மண்டல தலைவர்கள் மற் றும் அதிகாரிகளுக்கு வாக்கி டாக்கி வழங்கப்பட்டது. அதே போல் கவுன்சிலர்கள் உட்பட அனைவருக்கும் சிம்கார்டுகளும் வழங்கப்பட்டன. ஆனால் இவற்றின் மூலம் அதிகாரிகளை தொடர்பு கொண்டால் அவர்கள் பேசுவதில்லை. எந்த அதிகாரியும் பேச்சை கேட்பதில்லை. இதை வைத்துக்கொண்டு என்ன செய் வது? இது பயனில்லாத கருவி. எனவே இந்த வாக்கி டாக்கியை ஒப்படைக்கி றேன். (அதை மேயரிடம் ஒப்படைத்தார்).

சுப. சீதாராமன்: இது தெரிந்துதான் 6 மாதங்களுக்கு முன்பே இவற்றை (சிம்கார்டு, வாக்கி டாக்கி) பயன்படுத்துவதை நிறுத்தி விட்டேன்.

மேயர்: மண்டல தலைவர்கள், கவுன்சிலர்களுக்கு அதிகாரிகள் உரிய மரி யாதை அளிக்க வேண்டும். அவர்கள் அழைத்தால் உட னே பேச வேண்டும். இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சுதாபரமசிவம்: ஜூனி யர் இன்ஜினியர், எக்சிகியூடிவ் இன்ஜினியர் ஆகியோர்களை குறிப்பிட்ட இடைவெளியில் மாநகராட்சி விட்டு மாநகராட்சிக்கு இடம் மாற்ற வேண் டும். அப்போது தான் பணி கள் செம்மையாக நடக் கும்.

மேயர்: இதுகுறித்து முதல்வர் நடத்திய கூட்டத் தில் தெரிவித்துள்ளேன். அடுத்து திமுக ஆட்சி தான் வரும். இதே மாமன்றம் தான் அமையும். அப்போது இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கொப்பரை சுப்பிரமணி யம்: எனது வார்டுக்கு குடி நீர் சரிவர வருவதில்லை. பொதுமக்களுக்கு பதில் சொல்ல முடியவில்லை.

மேயர்: தண்ணீர் பிரச் னை தீர உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.

நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு

நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் மண்டல தலைவர் விஸ்வநாதபாண்டியன் பேசினார். அடுத்தபடம்: மேயர் ஏ.எல். சுப்பிரமணியன் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

நாய் தொல்லையை தீர்க்க வழக்கு

பாளை மண்டல தலைவர் சுப.சீதாராமன்: மாநகரப் பகுதியில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. நாய்களை பிடிக்க ப்ளூ கிராஸ் அமைப்பு தடை விதிக்கிறது. சுப்ரீம் கோர்ட்டில் இதற்கேற்ப சட்டம் போடுகிறார்கள். ஏனென்றால் அவர்கள் இதுபோன்ற பாதிப்புகளுக்கு ஆளாவதில்லை. நீங்களே சுப்ரீம் கோர்ட் வக்கீல் தானே? இதை எதிர்த்து வழக்கு போடக் கூடாதா? நான் பலமுறை பாதிக்கப்பட்டுள்ளேன். நீங்கள் நாய்த் தொல்லையால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா?

மேயர்: உங்கள் கடிகளில் இருந்து தப்பிப்பதே பெரிய காரியமாக உள்ளது. முதற்கட்டமாக நாய்களுக்கு கருத்தடை ஆபரேஷன் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்ததாக வழக்கு போடுவது பற்றி பரிசீலிக்கப்படும்.