Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் ஆய்வு

Print PDF

தினமணி             01.12.2010

மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் ஆய்வு

மதுரை, நவ.30: மதுரை மாநகராட்சிப் பகுதியில் நடைபெற்றுவரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து, மாநில நகராட்சிகள் நிர்வாக இயக்குநர் ப.செந்தில்குமார் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.

மதுரை மாநகராட்சிக் கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்த ஆய்வில், ஜவாஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தின்கீழ் நடைபெற்றுவரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து, மாநகராட்சி நிர்வாக இயக்குநர் செந்தில்குமார் மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், சுற்றுலாத்துறை மூலம் மதுரையில் நடைபெற்றுவரும் பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினார்.

மேலும், மாநகராட்சி மூலம் நடைபெறும் வரி வசூலிப்பை தீவிரப்படுத்தவும், மாநகராட்சி தொடர்பாக நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்குகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மழைக் காலம் முடிந்துவிட்டதால், மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் சேதமடைந்துள்ள சாலைகளைச் சீரமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

கமிஷனர் எஸ்.செபாஸ்டின், மண்டல நிர்வாக அலுவலர் அசோகன், தலைமைப் பொறியாளர் சக்திவேல், துணை கமிஷனர் தர்ப்பகராஜ், கண்காணிப்புப் பொறியாளர் விஜயகுமார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

நகராட்சி அலுவலர்கள் கூட்டம்: தென் மாவட்ட அளவிலான நகராட்சி அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாக இயக்குநர் செந்தில்குமார் ஆலோசனைகளை வழங்கினார்.