Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பக்கிள் ஓடை, பாதாளசாக்கடை பணி சென்னை உயர் அதிகாரி திடீர் ஆய்வு

Print PDF

தினமலர்             02.12.2010

பக்கிள் ஓடை, பாதாளசாக்கடை பணி சென்னை உயர் அதிகாரி திடீர் ஆய்வு

தூத்துக்குடி : தூத்துக்குடியில் நடந்து வரும் பக்கிள் ஓடை மற்றும் பாதாள சாக்கடை திட்ட பணிகளை சென் னை உயர் அதிகாரி நேற்று ஆய்வு செய்தார். தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பக்கிள் ஓடை இரண்டாம் கட்ட பணிகள் வேகமாக நடந்து வருகிறது. மூன்றாம் கட்ட பணிகளுக்கும் அரசு பணம் அனுமதி வழங்கியுள்ளது. பாதாள சாக்கடை திட்ட பணிகளும் நிறைவு பெ றும் நிலையை எட்டியுள்ளது. இந்நிலையில் இந்த பணிகளை பார்வையிட சென்னை நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலக கண்காணிப்பு பொறியாளர் வெங்கடாச்சலம் நேற்று தூத்துக்குடி வந்தார். பக்கிள் ஓடை மற்றும் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடக்கும் பல்வேறு இடங்களை பார்வையிட்டார். குறித்த காலத்திற்குள் பணிகளை முடிக்க அறிவுரை வழங்கினார். மாநகராட்சி கமிஷனர் குபேந்திரன், இன்ஜினியர் ராஜகோபாலன், இளநி லை பொறியாளர்கள் சரவணன், பிரின்ஸ் மற்றும் அதிகாரிகளுடன் மாநகராட்சி அலுவலகத்தில் இந்த திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் திண்டுக்கல்லில் நடக்கும் பணிகளை ஆய்வு மேற்கொள்ள சென்றார். இதற்கிடையில் தூத்துக்குடியில் மழையினால் முக்கிய ரோடுகளில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இதனால் வாகன போக்குவரத்திற்கு மிகவும் சிரமம் ஏற்பட்டிருக்கிறது. தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் பள்ளம் எங்கு இருக்கிறது. மேடு எங்கு இருக்கிறது என்று தெரியாமல் வாகன ஓட்டிகள் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. மழையால் உருவாகியுள்ள திடீர் பள்ளங்களில் மாநகராட்சி மூலம் சரள் போட்டு தற்காலிக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மழை நின்ற பிறகு அரசு அனுமதித்துள்ள 20 கோடி ரூபாயில் ரோடு போடும் பணி துவங்கும் என்று கூறப்படுகிறது.