Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தினகரன் செய்தி எதிரொலி வரி வசூலுக்கு கூடுதல் பணியாளர்கள் ஆணையர் அதிரடி நடவடிக்கை

Print PDF

தினகரன்             06.12.2010

தினகரன் செய்தி எதிரொலி வரி வசூலுக்கு கூடுதல் பணியாளர்கள் ஆணையர் அதிரடி நடவடிக்கை

உடுமலை,டிச.6:உடுமலை நகராட்சியில் ஊழியர் பற்றாகுறையால் வரிவசூல் மந்தமாக உள்ளது. தினகரன் நாளிதழில் வெளி வந்த இச் செய்தியால் வருகிற 15ம் தேதிக்குள் வரி முழுவதையும் வசூல் செய்ய கூடுதல் பணியாளர்களை நியமித்து ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

நடப்பு நிதியாண்டில் டிசம்பர் 15ம் தேதிக்குள் சொத்து வரி, காலியிட வரி, தொழில்வரி, குடிநீர் கட்ட ணம், நகராட்சி கடை வாடகை , லைசன்ஸ் கட்டணங்கள் ஆகியவற்றை உடுமலை நகராட்சி கனிணி மையத்தில் செலுத்தி ஜப்தி, குடிநீர் இணைப்பு துண்டி ப்பு போன்ற நடவடிக்கை யை தவிர்க்க வேண்டுமென ஏற்கனவே நகராட்சி சார் பில் அறிவிக்கப்பட்டிருந் தது. ஆனால் வரி வசூலில் மந்த நிலை காணப்பபடுவதால் நகராட்சி ஆணை யாளர் சுந்தராம்பாள் ஒரு அறிக்கை வெளியிட்டுள் ளார். அதன் விவரம்:

சனிக்கிழமை, மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் வசூல் மையம செயல்படும். அதற்கு பின்னும் வரியினங்களை செலுத்தாமல் இருந்தால் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும். கடைகள் சீல் வைத்து நகராட்சி பொறுப்பில் எடுத்துக் கொள்ளப்படும். சொத்து வரி செலுத்தாத வீடுகள் சீல் வைத்து ஜப்தி செய்யப்படும், காலியிடங் கள் நகராட்சி வசம் எடுத் துக் கொள்ளப்படும் என்று அதில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நகராட்சி வரி வசூல் பிரிவில் முன்பு 10 ஊழியர்கள் இருந்தனர். அவர்கள் வீடு, வீடாக சென்று விரைவில் வரி இனங்களை வசூல் செய்தனர். ஆனால் இந்த ஆண்டு 8 ஊழியர்கள் இல்லை.

2 பேர்களே இப்பணியில் ஈடுபட்டுள்ளனர், இதுவே வரி வசூல் மந்தத்திற்கு முக்கிய காரணம். மேலும் வரி வசூலுக்காகவே கம்ப்யூட்டர் வசதியுடன் ஒரு வாகனம் வாங்கப்பட்டது. அது இயக்கப்படாமல் நகராட்சி அலுவலக வளாகத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நிலைமை இப்படி இருக்க குறிப்பிட்ட காலத்திற்குள் வரி செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை என்றால் என்ன நியாயம் என பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இச்செய்தி நேற்று தினகரன் நாளிதழில் வெளி வந்தது.

அதன் எதிரொலியாக ஆணையர் சுந்தராம்பாள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். ஊழியர் பற்றாகுறை காரணமாக வரி வசூல் பாதிக்கப்பட்டுள்ளது. வரி வசூல் இலக்கு ரூ.1.5 கோடி உள்ளதால் அதை வசூலிக்க கூடுதல் ஊழியர்களை நியமித்துள் ளார்.

பொதுப்பிரிவில் 5அலு வலர்கள், வருவாய் அலுவலர்கள் 2 பேர், சுகாதார மேஸ்திரிகள் 4 பேர், மேல்நிலைத்தொட்டி காவலர்கள் மற்றும் பொறியாளர்கள் 10 பேர், சமுதாய மகளிர் சுயஉதவி குழு அமைப்பாளர்கள் 2 பேர், கனிணி துறையினர் 2 பேர் என அனைவரும் வரி வசூ லில் ஈடுபட வேண்டும். விடுமுறை நாட்களிலும் இவர்கள் வரிவசூல் பணி யில் ஈடுபட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.