Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பேரூராட்சி மீது ஊழல் புகார் விசாரிக்க உத்தரவு

Print PDF

தினகரன்            07.12.2010

பேரூராட்சி மீது ஊழல் புகார் விசாரிக்க உத்தரவு

கோவை, டிச 7: கோவை வடவள்ளி பேரூராட்சியில் பைப் லைன் பழுது பார்த்ததில் முறைகேடு நடந்திருப்பதாக மனுநீதி முகாமில் கொடுத்த புகார் மீது விசா ரணை நடத்த கலெக்டர் உத்தரவிட்டார். கோவை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் நேற்று நடந்தது. வடவள்ளி பொம்மணம்பாளையத்தை சேர்ந்த வெங்கிடகிரி என் பவர் பேரூராட்சி நிர்வாகம் மீது ஒரு புகார் மனு கொடுத் தார். அதில் வடவள்ளி பேரூராட்சியில் கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் பல்வேறு பணிகள் செய்ததில் ரூ.1.31 கோடிக்கு முறைகேடு நடந்துள்ளது. குறிப்பாக குடிநீர் குழாய் சரி பார்த்ததில் பெரிய அளவில் முறை கேடு நடந்துள்ளது. குப்பை வண்டி பழுது பார்த்ததில் மார்ச், ஏப்ரல் மாதத்தில் ரூ.2.52 லட்சம் செலவு செய் ததாக கூறப்பட்டுள்ளது. இதிலும் முறைகேடு நடந்துள்ளது. மறு தணிக்கை செய்து முறைகேடு கண்டுபிடித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண் டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.புகார் மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் உமாநாத், இது தொடர்பாக பேரூராட்சி உதவி இயக்குநரை விசாரிக்க உத்தரவிட்டார்.