Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குன்னூர் நகராட்சியில் வாடகை செலுத்தாத 10 கடைக்கு சீல்

Print PDF

தினகரன்             07.12.2010

குன்னூர் நகராட்சியில் வாடகை செலுத்தாத 10 கடைக்கு சீல்

குன்னூர், டிச.8: குன்னூர் நகராட்சிக்கு சொந்தமான இடம் மற்றும் கட்டடங்களில் மொத்தம் 968 தனியார் கடைஇயங்கி வருகிறது. இதில் மாதம் மற்றும் நாள் வாடகை வசூல் செய்யப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக கடை வாடகையை சரியாக செலுத்தாததால் நகராட்சியில் நிதி ஆதாரம் குறைந்து வருவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து, நகராட்சி ஆணையர்(பொறுப்பு) சண்முகம் உத்தரவின் பேரில் வருவாய் அலுவலர்கள் சக்திவேல், பாஸ்கரன், சந்தைகண்காணிப்பாளர்கள் மற்றும் வருவாய் உதவி அலுவலர்கள் ஆகியோர் அடங்கிய குழு நேற்று முன் தினம் குன்னூர் பஸ் நிலையம், மார்க்கெட், மவுண்ட்ரோடு உள்ளிட்ட இடங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் அதிக வாடகை நிலுவை வைத்துள்ள 10 கடைகளுக்கு சீல் வைத்தனர். இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

சீல் வைக்கப்பட்ட 10 கடைகளில் 6 லட்சத்து 7 ஆயிரத்து 860 ரூபாய் வாடகை நிலுவை உள்ளது. இதில் ஒரு கடை மட்டும் 2 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் நிலுவை வைத்துள்ளது. நாங்கள் பலமுறை வலியுறுத்திய பிறகும் தொடர்ந்து வாடகை செலுத்தாமல் இருந்ததால் இந்த நடவடிக்கை எடுத்துள்ளோம். இதேபோல் மார்க்கெட் பகுதியில் 10 லட்சம் ரூபாய் வரை வாடகை பாக்கியுள்ளது. இதனை வசூலிக்க அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வரும் 15ம் தேதிக்குள் நகராட்சியில் சொத்து வரி மற்றும் குடிநீர் வரி கட்டணத்தை செலுத்த நுகர்வோர் அறிவுறுத்தப்படுகிறார்கள். இதன்படி நாளொன்றுக்கு ரூ.6 முதல் 8 லட்சம் வரை வரி வசூல் செய்யப்பட்டு வந்தாலும், சொத்து வரி மட்டும் 23 லட்சம் ரூபாய் பாக்கியுள்ளது. மேலும் குடிநீர் வரி 3.5 லட்சம் ரூபாய் நிலுவையில் உள்ளது. இதனை வரும் 15ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். இன்றுவரை வரி செலுத்தாத 7 வீடுகளின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் ஜப்தி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றனர்.