Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட 638 வீடுகளுக்கு நோட்டீஸ்

Print PDF

தினகரன்              09.12.2010

அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட 638 வீடுகளுக்கு நோட்டீஸ்

புதுடெல்லி, டிச.9: அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட 638 வீடுகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று மாநகராட்சி நிலைக் குழு தலைவர் தெரிவித்தார்.

இதுபற்றி நிலைக் குழுத்தலைவர் யோகேந்தர் சந்தாலியா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

லட்சுமி நகர் லலிதா பார்க் அருகில் இருந்த 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 70 பேர் பலியானா ர்கள். இந்த சம்பவம் கடந்த மாதம் 15ம் தேதி நடந்தது. இதை தொடர்ந்து அனுமதி இல்லாமல் கட்டிடம் கட்டுவதை கட்டுப்படுத்த மாநகராட்சி முடிவு செய்தது.

தெற்கு டெல்லியில் உள்ள ஷாஷ்தாரா பகுதியில் அனுமதியில்லாமல் கட்டப்படும் 638 வீடுகளுக்கு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது. அந்த கட்டிடங்கள் பாதுகாப்பு முறை களை பின்பற்றி கட்டப்படுகின்றனவா? என்று மாநகராட்சி அதிகாரிகள் சோதனை செய்வார்கள்.

அதன் பிறகு வீடுகளின் சொந்தக்காரர்கள் உடனடியாக மாநகராட்சிக்கு முறை ப்படி மனு செய்து கட்டிடம் கட்டுவதற்கான அனுமதியை பெற்றுக் கொள்ள வேண்டும். மாநகராட்சி கொடுக்கும் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இதேபோல பலவீனமாகவும், ஆபத்தை விளைவிக்கக் கூடிய வகையில் இருக்கும் கட்டிடங்கள் பற்றியும் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். ஆபத்தான கட்டிடங்களை மாநகராட்சி இடித்து தள்ளும். அல்லது கட்டிட உரிமையாளர்களே இடித்து விட வேண்டும்.

ஏற்கனவே தெற்கு டெல்லியில் சிவில் லைன் காலனி உட்பட பல்வேறு பகுதிகளில் ஆபத்தான நிலையில் இருந்த 30 கட்டிடங்களை மாநகராட்சி இடித்து தள்ளி விட்டது. இவ்வாறு யோகேந்தர் சந்தாலியா கூறினார்.