Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பிளாஸ்டிக் பொருள் பயன்படுத்தும் கடை உரிமம் ரத்து செய்யப்படும் : செயல் அலுவலர் எச்சரிக்கை

Print PDF

தினமலர்      17.12.2010

பிளாஸ்டிக் பொருள் பயன்படுத்தும் கடை உரிமம் ரத்து செய்யப்படும் : செயல் அலுவலர் எச்சரிக்கை


குஜிலியம்பாறை, டிச.17: பிளாஸ்டிக் பொருள் பயன்படுத்தும் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று பாளையம் பேரூராட்சி செயல்அலுவலர் நாட்ராயன் தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் வணிக நிறுவனங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டு சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்ய கலெக்டர் வள்ளலார் உத்தரவிட்டார். இதையடுத்து பாளையம் பேரூராட்சி நிர்வாகத்தினர், குஜிலியம்பாறையில் உள்ள மளிகை கடை, ஓட்டல்கள், இறைச்சி கடைகள், காய்கறி கடைகள், பேக்கரி, மெடிக்கல், பெட்டிக்கடைகளில் திடீர் சோதனை நடத்தி பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீங்கு குறித்து துண்டு பிரசுரங்கள் அச்சிட்டு விநியோகிக்கப்படுகின்றன.

இதுகுறித்து பாளையம் பேரூராட்சி செயல்அலுவலர் நாட்ராயன் கூறும்போது, குஜிலியம்பாறை பகுதியில் உள்ள கடைகளில் இதுவரை தடை செய்யப்பட்ட 380 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடைகளில் தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது.
பறிமுதல் செய்யப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பொதுமக்களுக்கு தீங்கு ஏற்படாத வகையில் குஜிலியம்பாறை அருகே உள்ள தனியார் சிமிண்ட் ஆலை கலனில் 1400டிகிரி வெப்பத்தில் எரிக்கப்படுகிறது. தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும், என்றார்.