Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கீழக்கரை நகராட்சிக் கூட்டம்

Print PDF

தினமலர் 31.08.2009

கீழக்கரை நகராட்சிக் கூட்டம்

கீழக்கரை, ஆக. 30: கீழக்கரை நகராட்சிக் கூட்டம் தலைவர் எஸ்..ஹெச். பஷீர் அஹமது தலைமையில், செயல் அலுவலர் வி. சுந்தரம், தலைமை எழுத்தர் மதிவாணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இதில், காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டம் மூலம், கீழக்கரை நகராட்சிப் பகுதிகள் முழு பயனடைய ரூ. 1.66 கோடி மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டு, 10 லட்சம் லிட்டர் குடிநீரைத் தேக்க குடிநீர்த் தொட்டி கட்ட வேண்டும் அதற்குரியை நிதியை அரசு மானியமாகவோ, பாதி மானியமாகவோ, பாதி கடனாகவோ தர வேண்டும் எனவும், இத்தொகையை 5 ஆண்டுகளுக்குள் ஒரு இணைப்புக்கு ரூ. 5 ஆயிரம் வீதம், 4 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் வழங்குவதற்கு முன்பணமாக ரூ. 2 கோடி வசூலித்து, அரசுக்கு திருப்பிச் செலுத்திவிட முடியும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

துப்புரவுப் பணிகளை முழுமையாகச் செயல்படுத்த, தனியார் நிறுவனம் மூலம், கூடுதலாக 27 துப்புரவுப் பணியாளர்களை நியமிக்கவும், அதற்குண்டான செலவை, தனியார் அறக்கட்டளைகள் மூலம் பெறப்பட்டு, வரும் நிதியில் இருந்து சரிகட்டவும் தீர்மானிக்கப்பட்டது.