Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பொது இடத்தில் செப்டிக் டேங்க் கழிவு நீர் கொட்டினால் ரூ. 1000 அபராதம்

Print PDF

தினகரன்      01.02.2011

பொது இடத்தில் செப்டிக் டேங்க் கழிவு நீர் கொட்டினால் ரூ. 1000 அபராதம்

கோவை, பிப்.1:பொது இடத்தில் செப்டிங் டேங்க் கழிவு நீர் கொட்டினால் ரூபாய் ஆயிரம்
அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கோவை மாநகராட்சி மாமன்ற அவசர கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கோவை மாநகராட்சி பகுதியில் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் தனியார் நிறுவனங்கள் ஆங்காங்கே கழிவு நீர் ஓடைகளில் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு, சுற்றுப்புற சூழல் கேடு ஏற்படுகிறது.

இதனை ஒழுங்குபடுத்த இப்பணிகளில் ஈடுபடும் தனியார் நிறுவனங்கள் இக்கழிவுகளை உக்கடம் கழிவு நீர் பண்ணையில் கொண்டு வந்து சேர்க்க அனுமதிக்கப்படுகிறது.
இதற்கு கட்டணமாக ஒரு லாரிக்கு ரூ. 50 வீதம் மாதம் ஒன்றிற்கு ரூ. 1500 விதிக்க சுகாதார நிலைக்குழு தீர்மானித்துள்ளது. எனவே மேற் கொண்ட தொகை யினை வசூலிக்க தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

அப்போது கம்யூனிஸ்ட் கவுன்சிலர் பத்மநாபன், ஒரு லாரிக்கு ரூ. 1500 வசூலிப்பது அதிக தொகை என்றார். திமுக கவுன்சிலர் உதயகுமார் குறுக்கிட்டு, ‘இந்த கட்டணம் மிக குறைவு தான்.

தனியார் நிறுவனங் கள் எவ்வளவோ சம்பாதிக்கின்றனர். எனவே கட்டணத்தை அதிகரிக்க வேண் டும். லைசன்ஸ் இல்லாமல் செயல்படும் லாரிகளை பறிமுதல் செய்ய வேண்டும். பொது இடத்தில் கழிவுகளை கொட்டும் லாரிக்கு அப ராதம் விதிக்க வேண்டும்’ என்றார்.

அதை தொடர்ந்து தீர் மானம் நிறைவேற்றப்படுவ தாக அறிவித்த ஆளும் கட்சி தலைவர் திருமுகம், ‘மாந கரில் கழிவு நீரை எடுக்கம் லாரி நிறுவனங்கள் மாநகராட்சியில் பதிவு செய்ய வேண்டும். ரோட்டோரத் திலோ, பொது இடத்திலோ, சாக்கடை கால்வாயிலோ கழிவு நீரை கொட்டினால் ரூ. 1000 அபராதம் விதிக்கப்படும்’ என்றார்.

கோவை மாநகராட்சி பகுதியில் திருச்சி ரோடு ராமநாதபுரம் சந்திப்பு, அவி னாசி ரோடு லட்சுமி மில் சந்திப்பு, கே.ஜி.வளாகம் நுழைவு வாயில் அருகில் ஆகிய இடத்தில் மறைந்த முன்னாள் நிதியமைச்சர் சுப்ரமணியன் திருவுருவ சிலை அமைக்க அனுமதி அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. இத்தீர்மானத்தை தொடர்ந்து பேசிய கவுன்சிலர் வேல்முருகன், ‘கோவை யில் உலக தமிழ்செம்மொழி மாநாடு நடத்தப்பட்டது.

திருவள்ளுவரை மைய மாக கொண்டு மாநாடு நடத்தப்பட்டது. ஆனால் மாநகரில் ஒரு இடத்தில் கூட திருவள்ளுவர் சிலை வைக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை’ என்றார்.

மாநகரின் அனைத்து பகுதியில் சீரான, 24 மணி நேரமும் குடிநீர் கிடைக்கும் வகையில் தற்போது சிறு வாணி, பில்லூர் 1 மற்றும் பில்லூர் 2 குடிநீர் திட்டத் தின் கீழ் புதிதாக 29 மேல் நிலை நீர் தேக்க தொட்டிகள், 3 கீழ்நிலை தொட்டிகள் பம்பு அறைகளுடன் கட்டுவதற்கும், இதற்காக உத்தேச மதிப்பீட்டு ரூ. 595.24 கோடி ஆகும் என அறிக்கை பெறப்பட்டுள்ளதால், திட்ட அறிக்கையினை அரசுக்கு அனுப்பி உரிய மானியம் நிதி பெற மாமன்றம் ஒப்பு தல் அளிக்கப்பட்டன. இத்திட்டத்தில் 50 மற்றும் 14 வது வார்டு களை கூடுதலாக சேர்க்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.