Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தும் கடைகளுக்கு ரூ.1,000 அபராதம்: நகராட்சிக் கூட்டத்தில் முடிவு

Print PDF

தினமணி                 01.08.2012

பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தும் கடைகளுக்கு ரூ.1,000 அபராதம்: நகராட்சிக் கூட்டத்தில் முடிவு

காஞ்சிபுரம்,  ஜூலை  31: தமிழக  அரசால்  தடை   செய்யப்பட்டுள்ள  பிளாஸ்டிக்  பைகளைப் பயன்படுத்தும்  கடைகளுக்கு  ரூ. 1,000  அபராதம்  விதிப்பது  என  காஞ்சிபுரம்  நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

காஞ்சிபுரம்  நகர்மன்றக்     கூட்டம்   தலைவர்   மைதிலி   திருநாவுக்கரசு    தலைமையில் திங்கள்   கிழமை  நடந்தது.  துணைத்  தலைவர்  ஆறுமுகம்,  நகராட்சி   ஆணையர்   விமலா, பொறியாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் உறுப்பினர்கள், அதிகாரிகள் கலந்து  கொண்டனர்.

தீர்மானங்கள்: காஞ்சிபுரம் நகராட்சி எல்லைக்கு உள்பட்ட அனைத்து பகுதிகளிலும் திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணி செயல்படுத்தப்பட்டு வருகிறது. 40 மைக்ரான் அளவுக்குக் குறைவாக உள்ள  பிளாஸ்டிக்   பொருள்களான கேரி பேக்,  டம்ளர்கள்  உள்ளிட்டவற்றைப்   பயன்படுத்தக் கூடாது   எனத்  தமிழக  அரசு  தடை  செய்துள்ளது. எனவே   காஞ்சிபுரம் நகராட்சிக்கு   உள்பட்ட பகுதிகளில் 40 மைக்ரான் அளவுக்குக் குறைவாக உள்ள  பிளாஸ்டிக் பொருள்கள்  பயன்படுத்தத் தடை விதிக்கப்படுகிறது. ÷ஹோட்டல்கள், டீக்கடைகள், பூக்கடைகள் உள்ளிட்டகடைகளில் 40 மைக்ரான் அளவுக்குக் கீழ் உள்ள பிளாஸ்டிக் பொருள்களை  உபயோகப்படுத்தினால்  ரூ.1,000 அபராதம்  விதிக்கப்படும்.  பொது  மக்கள்  பயன்படுத்தினால் ரூ.100  அபராதம்  விதிக்கப்படும் என்பது உள்பட 54 தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.