Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

லைசென்சை புதுப்பிக்காததால் சென்னையில் 39 ஆயிரம் கடைக்காரர்களுக்கு நோட்டீஸ்: மாநகராட்சி நடவடிக்கை

Print PDF

மாலை மலர்   09.08.2012

லைசென்சை புதுப்பிக்காததால் சென்னையில் 39 ஆயிரம் கடைக்காரர்களுக்கு நோட்டீஸ்: மாநகராட்சி நடவடிக்கை

 லைசென்சை புதுப்பிக்காததால் சென்னையில் 39 ஆயிரம் கடைக்காரர்களுக்கு நோட்டீஸ்: மாநகராட்சி நடவடிக்கை

சென்னை, ஆக. 9-சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 1.6 லட்சம் கடை வியாபாரிகள் உள்ளனர். சென்னை மாநகராட்சி கடந்த சில மாதங்களுக்கு முன்பு வணிக வரித்துறை உதவியுடன் வியாபார உரிமம் பெறாத கடைகள் பற்றிய தகவலை திரட்டியது.  
 
39 ஆயிரம் கடைக்காரர்கள் இதுவரை உரிமம் புதுப்பிக்காமல் இருப்பது தெரிய வந்துள்ளது. அந்த கடைக்காரர்களுக்கு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்புகிறது. கடந்த 2011-2012-ம் ஆண்டில் 26,662 கடை வியாபாரிகளிடம் வணிக உரிமத் தொகையாக மாநகராட்சி சில கோடிகளை வசூலித்தது. 2012-2013-ம் ஆண்டுக்கான உரிமத்தை புதுப்பிக்கும்படி மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் பெரும்பாலானவர்கள் மாநகராட்சி அறிவிப்பை கண்டு கொள்ளவில்லை.
 
கடைக்காரர்கள் உரிமம் புதுப்பிக்காததற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. கடை நடத்தும் இடத்தின் உரிமையாளர் மற்றும் கழிவு நீர் இணைப்பு தொடர்பாக குடிநீர் வாரிய சான்று பெற்றால்தான் உரிமம் புதுப்பிக்க முடியும். இவற்றை பெறுவதில் பல்வேறு சிரமங்கள் இருப்பதாக வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.