Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சிவகங்கையில் 2 பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் கட்ட ரூ.20 லட்சம் ஒதுக்கீடு: நகராட்சித் தலைவர்

Print PDF
தினமணி          24.03.2013

சிவகங்கையில் 2 பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் கட்ட ரூ.20 லட்சம் ஒதுக்கீடு: நகராட்சித் தலைவர்


சிவகங்கையில் இரு பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் அமைக்க ரூ.20 லட்சம்  ஒதுக்கப்பட்டுள்ளதாக நகராட்சித் தலைவர் எம்.அர்ச்சுனன் தெரிவித்தார்.

சிவகங்கையில் நகர்மன்றக் கூட்டம் தலைவர் எம்.அர்ச்சுனன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் துணைத் தலைவர் கே.வி.சேகர், ஆணையர் வரதராஜன், சுகாதார ஆய்வாளர் அய்யப்பன், நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதில் தலைவர் அர்ச்சுனன் பேசியதாவது:

சிவகங்கையில் கோரிக்கை மனுக்களுக்குப் பதிவு எண் கொடுக்கப்பட்டு அனைத்து  மனுக்களும் கணினியில் பதிவு செய்யப்படுகிறது.

நீர் ஆதாரத்தைப் பெருக்கும் வகையில் நகரில் உள்ள அனைத்து ஊருணிகளும் தூர்வாரப்பட்டு கரைகள்  பலப்படுத்தப்படும்.

நகரில் 48 காலனி, சுண்ணாம்புக் காளவாசல் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் அமைக்க ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுச் சுவர் கட்டும் பணி விரைவில் தொடங்கும்.

பங்குனி உத்திரத் திருவிழாவுக்கு தேரோட்டம் நடைபெற வசதியாக வீதிகள் பராமரிக்கப்பட்டுள்ளன.

சிவகங்கை மன்னர் கல்லூரி எதிர்புறம் உள்ள கூட்டுறவு நிறுவனம் நலிவடைந்து அதன் அலுவலகக் கட்டடம் ஏலம்போகும் நிலையில் உள்ளது.  நகராட்சி நிர்வாகம் சார்பில் அரசு மதிப்பில் அந்தக் கட்டடத்தை ஏலம்போகும் முன் விலைக்கு வாங்கினால் நகராட்சிக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

அங்கு நகராட்சிக்கு சொந்தமான வாகனங்களை நிறுத்திக்கொள்ளலாம். எனது இந்த கோரிக்கையை தீர்மானமாக இக்கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டும் என்றார்.

துணைத் தலைவர் சேகர் பேசும்போது, காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடக் காரணமாக இருந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார்.    இக் கோரிக்கை தீர்மானம் நிறைவேறியது.