Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குழி தோண்டி குழாய் இணைப்புகளில் தண்ணீர் எடுத்தால் கடும் நடவடிக்கை

Print PDF
தினமணி      27.03.2013

குழி தோண்டி குழாய் இணைப்புகளில் தண்ணீர் எடுத்தால் கடும் நடவடிக்கை


பெங்களூரில் குழி தோண்டி குடிநீர்க் குழாய் இணைப்புகளில் நீர் எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெங்களூர் குடிநீர் வடிகால் வாரியம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெங்களூரில் பல்வேறு பகுதிகளில், சாலை ஓரங்களில் குழி தோண்டி சட்ட விரோதமாக குடிநீர் எடுத்து வருவதாக வாரியத்துக்குப் புகார்கள் வந்துள்ளன.

குடிநீர் பயன்பாட்டை அளவிடும் மீட்டர், வீட்டினுள் பொருத்தப்பட்டிருக்கும். வெளியில் சாலையில் குழி தோண்டி, கூடுதல் நீர் பிடிப்பதால், அந்த நீர் கணக்கில் வராது.

இவ்வாறு செய்வது குடிநீர் வடிகால் வாரியச் சட்டப்படி குற்றம். மேலும், தோண்டப்படும் குழிகளில் உள்ள குழாய்களை முறையாக மூடுவதில்லை.

இதனால், குழியில் தேங்கியுள்ள நீர் மீண்டும் குடிநீர் குழாயினுள் செல்ல வாய்ப்புள்ளது. இதன்மூலம், குடிநீர் மாசடையும் நிலை ஏற்படும்.

கோடை காலம் தொடங்க உள்ள நிலையில், பல்வேறு மாசடைந்த குடிநீரால் பரவும் நோய்கள் வருவதுக்கும் வாய்ப்புள்ளது.

இதைத் தவிர்க்கும் வகையில், வாரிய அதிகாரிகள் மாநகரத்தின் அனைத்து இடங்களிலும் விரைவில் சோதனை நடத்த உள்ளனர். சட்டவிரோதமாக குழிகள் தோண்டி நீர் எடுப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த ஒரு வாரத்தில் பெங்களூரில் பல்வேறு பகுதிகளில் மேற்கொண்ட ஆய்வில் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டு வந்த 224 குடிநீர்க் குழாய் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

குடிநீர் வரி செலுத்தாதவர்களிடம் இருந்து ரூ.3.28 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. பணம் செலுத்தாத 62 வீட்டின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.