Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கோடையில் தடையின்றி குடிநீர் வழங்க கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

Print PDF
தினமலர்                    27.03.2013

கோடையில் தடையின்றி குடிநீர் வழங்க கவுன்சிலர்கள் வலியுறுத்தல்


திருமழிசை:""கோடையில் தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்'' என, பேரூராட்சிக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.திருமழிசை பேரூராட்சி கூட்டம், தலைவர் அமுதா தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் ஜெயக்குமார், துணைத் தலைவர் மகாதேவன் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் நடந்த விவாதம்:சங்கர் (தி.மு.க.,): திருமழிசையில் உள்ள திருவள்ளூர் நெடுஞ்சாலையை அகலப்படுத்துவதற்காக, சாலையின் இருபுறமும் உள்ள கட்டடத்தை இடித்து, பல மாதம் ஆகியும் சாலை செப்பனிடும் பணி நடைபெறவில்லை.திருநாவுக்கரசு (தி.மு.க.,): கோடை காலம் நெருங்குவதால், தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க வேண்டும்.சங்கர் (அ.தி.மு.க.,): திருமழிசை பேருந்து நிலையம் அருகே உள்ள, பேரூராட்சிக்கு சொந்தமான நிலங்களை பாதுகாத்திட, முள்வேலி அமைக்க வேண்டும். குடிநீர் தட்டுப்பாட்டை போக்க, உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.தலைவர் அமுதா: கவுன்சிலர்கள் குறிப்பிட்ட கோரிக்கைகள் மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கோடை காலத்தில் தட்டுப்பாடின்றி, குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பல்வேறு திட்டப் பணிகள் நிறைவேற்றப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.
Last Updated on Wednesday, 27 March 2013 11:53