Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ராமநாதபுரம் நகராட்சி பணிகளுக்கு பதிவு மூப்பு பரிந்துரை

Print PDF
தினமணி     28.03.2013

ராமநாதபுரம் நகராட்சி பணிகளுக்கு பதிவு மூப்பு பரிந்துரை

ராமநாதபுரம் நகராட்சிக்கு இளநிலை உதவியாளர், வருவாய் உதவியாளர், சங்கலி ஆள், பணி ஆய்வர் ஆகிய பணிக் காலியிடங்களுக்கு பதிவு மூப்புள்ளோர் பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாக ஆட்சியர் க.நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இளநிலை உதவியாளர் மற்றும் வருவாய் உதவியாளர்: கல்வித் தகுதியாக 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்,1.1.2013-ன்படி தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் வயது 18 முதல் 35. பிற்பட்ட மற்றும் மிகவும் பிற்பட்ட வகுப்பினர் வயது 18 முதல் 32 வரை. பொதுப் போட்டியாளர் வயது 18 முதல் 30. அரசு விதிமுறைகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு. தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களில் அருந்ததியரில் முன்னுரிமையுள்ளவர்கள் அனைவரும் பரிந்துரை செய்யப்படுவர். முன்னுரிமையுள்ள பொதுப் போட்டியாளர்களில் ஆதரவற்ற விதவைகள் 10.9.1997 வரை பதிவு செய்தவராகவும் இருக்க வேண்டும்.

சங்கலி ஆள்: கல்வித் தகுதி எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு வயது 18 முதல் 35. பிற்பட்ட மற்றும் மிகவும் பிற்பட்டோர் வயது 18 முதல் 32. பொதுப் போட்டியாளர் 18 முதல் 30. அரசு விதிமுறைகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு. முன்னுரிமையுள்ள பொதுப்போட்டியாளர்களில் கலப்புத் திருமணம் தவிர மற்ற அனைவரும் பரிந்துரை செய்யப்படுவர். முன்னாள் மற்றும் இன்னாள் படைவீரரைச் சார்ந்தோர்கள் 25.1.2006 வரை பரிந்துரை செய்யப்படுவர்.

பணி ஆய்வர்: பணி ஆய்வர் பணிக்காலியிடத்திற்கு கல்வித் தகுதி 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் கல்வித் தகுதியினை பதிவு செய்தவராக இருக்க வேண்டும். 1.1.2013-ன்படி தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்பட்டோர் வயது 18 முதல் 35. பிற்பட்டோர் மற்றும் மிகவும் பிற்பட்டோர் 18 முதல் 32. பொதுப்போட்டியாளர் 18 முதல் 30. கலப்புத் திருமணம் தவிர பொதுப்போட்டியாளர்களில் முன்னுரிமையுள்ளவர்கள் பரிந்துரைக்கப்படுவர். இக்காலிப் பணியிடங்கள் அனைத்துக்கும் அரசு விதிமுறைகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு. இளநிலை உதவியாளர் மற்றும் வருவாய் உதவியாளர், சங்கலி ஆள் பணிக்காலியிடங்களுக்கு ராமநாதபுரம் நகராட்சி எல்லைக்குள் முகவரி கொடுத்து பதிவு செய்தவர்கள் மட்டுமே பரிந்துரைக்கப்படும்.

இக்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு தகுதிகள் உடைய பதிவுதாரர்கள் பரிந்துரை செய்யப்படவுள்ளதால் ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு தங்களது வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு அடையாள அட்டை மற்றும் அனைத்து சான்றிதழ்களுடன் வரும் 28 ஆம் தேதி நேரில் வந்து பரிந்துரை விவரத்தை தெரிந்து கொள்ளுமாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.