Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குளங்களில் கழிவு கொட்ட தடை கட்டடக்கழிவு கொட்ட 17 பள்ளம் தேர்வு

Print PDF
தினகரன்                      30.03.2013

குளங்களில் கழிவு கொட்ட தடை கட்டடக்கழிவு கொட்ட 17 பள்ளம் தேர்வு

கோவை, :கட்டட கழிவுகளை கொட்ட நகரில் 17 பள்ளம், கல்லுக்குழி தேர்வு செய்யப்பட்டுள்ளது. குளங்களில் கழிவு கொட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவை நகரில் பல இடங்களில் புதிய கட்டடங்கள் கட்டும் பணியும், பழைய கட்டடங்களை இடித்து அகற்றும் பணியும் நடக்கிறது. கட்டட இடுபாடு பொருட்களை குளக்கரை, வாய்க்கால் மற்றும் நீர் தேக்க பகுதியில் கொட்டுவது வாடிக்கையாக நடக்கிறது. முத்த ண்ண குளம், செல்வாம்பதி, உக்கடம் பெரியகு ளம், வாலாங்குளம், குறிச்சி குளம், சிங்காநல்லூர் குளத்தில் லோடு கணக்கில் கட்டட இடிபாடு பொரு ட்கள் குவிக்கப்பட்டு வருகிறது. நீர் நிலைக ளில் கட்டட இடிபாடுகளை கொட்டக்கூடாது என மாசு கட்டுபாட்டு வாரிய ம், பொதுப்பணித்துறை, மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.  ஆனால் கட்டட கழிவுகளை குவிக்க வேறு இடம் ஒதுக்காமல் விட்டதால், இந்த அறிவிப்பை யாரும் மதிக்கவில்லை.

மதுக்கரை பகுதியில் உள்ள கல் குவாரிகளில் கட்டட இடிபாடு பொருட்களை கொட்ட மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது. ஆனால் அதற்கு மதுக்கரை பேரூராட்சி நிர்வாகம் ஒப்புதல் தரவில்லை. மேலும் நகர் பகுதியில். மதுக்கரை வரை கட்டட இடிபாடு பொருட்களை கொண்டு செல்ல பலர் தயக்கம் காட்டி வந்தனர். இந்நிலையில், கட்டட இடிபாடு பொருட்களை கொட்ட மாநகராட்சி, பொதுப்பணித்துறை, குடிசை மாற்று வாரியம், வீட்டு வசதி வாரியம் சார்பில் 17 இடத்தில் பள்ளம், கல்லுக்குழி, பாழடைந்த கிணறுகள் தேர்வு செய்யப்பட்டது.    

கோவை தெற்கு மண்டலத்திற்குட்பட்ட 87வது வார்டு பாரதியார் நகர், 93வது வார்டு மாரியம்மன் கோயில் வீதி, 97வது வார்டு அன்னை இந்திரா நகர், 100வது வார்டு ரங்கநாதபுரம் கல்லுக்குழி மேற்கு மண்டலத்தில் 8வது வார்டு பி.என்.டி காலனி, 16வது வார்டு கவுண்டம்பாளையம், மருதாபுரம், நால்வர்நகர், வடவள்ளி உள்ளிட்ட பகுதியில் பள்ளம், கிணறுகளில் கட்டட இடுபாடு கொட்ட ஒப்புதல் தரப்பட்டுள்ளது.

மகாலட்சுமி நகர், வள்ளலார் நகர், சுண்டப்பாளையம், லிங்கனூர், அத்தனூர், ஏ.டி.காலனி, எஸ்.ஐ.எச்.எஸ் காலனி கல்லுக்குழி, சிங்காநல்லூர் ஹவுசிங் யூனிட், ராஜீவ்காந்தி நகர், வெள்ளக்கிணறு ஹவுசிங் யூனிட், சேரன் காலனி, சுப்ரமணியம்பாளையம், பாலமுருகன் நகர், சின்னவேடம்பட்டி பகுதியில் குப்பை கொட்ட இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இடங்களில் கட்டட இடுபாடு கொட்டும் இடம் என அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது. இந்த பகுதியில் பாழடைந்த கிணறு, பள்ளங்களை கட்டட இடிபாடு கொட்ட மூடவும் திட்டமிடப்பட்டுள்ளது.