Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நாகூர் தர்கா கந்தூரி விழா ஏற்பாடுகள் தீவிரம் கலெக்டர் ஆய்வு

Print PDF
தினத்தந்தி        05.04.2013

நாகூர் தர்கா கந்தூரி விழா ஏற்பாடுகள் தீவிரம் கலெக்டர் ஆய்வு


நாகூர் தர்கா கந்தூரி விழாவிற்கான முன்னேற் பாடுகள் குறித்து நாகை மாவட்ட கலெக்டர் முனு சாமி ஆய்வு செய்தார்.

முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு

நாகை அடுத்த நாகூர் தர்கா வில் கந்தூரி விழா வருகிற 11ந் தேதி தொடங்கி 24ந்தேதி வரை நடைபெறுகிறது. விழா வின் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து 2 முறை மாவட்ட கலெக்டர் தலைமையில் ஆய் வுக் கூட்டம் நடத்தப்பட்டு தர்கா சுற்றி உள்ள அக்கிரமிப்பு கள் அகற்றப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நாகை மாவட்ட கலெக்டர் முனுசாமி, கந்தூரி விழா முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். நாகூர் தர்கா முன்பு ஆக்கிர மிப்பு அகற்றும் பணிக்கு பிறகும் மீண்டும் வைக்கபட்டி ருந்த ஒருசில தற்காலிக தரைக் கடைகள் மற்றும் தள்ளு வண்டிகளை அகற்றக்கோரி வருவாய் துறை மற்றும் நகராட்சி துறைக்கு கலெக்டர் உத்தரவிட்டார். தர்கா வாசல், யானை கட்டி முடுக்கு, நியூ பார்க், கால் மாட்டு வாசல், தர்கா குளம் வடகரை உள் ளிட்ட பகுதிகளை கலெக்டர் அனைத்து துறை அலுவலர் களுடன் நேரில் சென்று நடைபெற்று வரும் விழா தொடர்பான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய் தார். நாகூர் நகர்நல மையத்தை ஆய்வு செய்த கலெக்டர் முனுசாமி தொடர்ந்து வருகை தராமல் உள்ள டாக்டர் தமிழ்ச்செல்வி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

அதிகாரிகளுக்கு உத்தரவு

கடைத்தெருவில் இரு சக்கர வாகனங்கள் ஒரு பக்கமாக பார்க்கிங் செய்ய வேண்டும். நாகூர் நகரை சுற்று உள்ள சாக்கடை அடைப்புகளை நகராட்சி துறையினர் உடனடி யாக அகற்ற வேண்டும். நக ராட்சி சார்பில் பராமரிக்கப் படும் கழிவறைகளை சுத்தம் செய்து யாத்ரீகர்கள் பயன் படுத்தும் வகையில் அவை தொடர்ந்து பராமரிக்க வேண் டும். மேலும் மொபைல் டாய் லெட் அமைக்கும் இடங்களை சுத்தம் செய்து உடனடியாக பணிகளை முடிக்க வேண்டும். தர்கா குளத்தில் உள்ள குப்பை களை அகற்றி பக்தர்கள் புனித நீராட சுத்தம் செய்ய வேண் டும். நகராட்சி, வருவாய் துறை, காவல்துறை, தமிழ்நாடு மின்சார வாரியம், குடிநீர் வடிகால் வாரியம், உணவு பாதுகாப்பு அலுவலர்கள், நெடுஞ்சாலை துறை ஆகிய துறைகள் இணைந்து அனைத்து முன்னெற்பாடு பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

கலெக்டரின் இந்த ஆய்வின் போது, சுகாதாரத் துறை இணை இயக்குனர் ரால்ப் செல்வின், உதவி கலெக்டர் மணிகண்டன், தாசில்தார் சம்பத்குமார், நகரமன்ற துணைத் தலைவர் சுல்தான் அப்துல்காதர், நகர மன்ற உறுப்பினர் முகமதுகபீர், மேனேஜிங் டிரஸ்டி சேக்அசல் சாகிப், நாகூர் வளர்ச்சி குழுவின் தலைவர் நவுசாத் ஆகியோர் உடனிருந்தனர்.