Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கோடப்பமந்து கால்வாயில் குப்பை கொட்டினால் அபராதம்

Print PDF
தினமணி       07.04.2013

கோடப்பமந்து கால்வாயில் குப்பை கொட்டினால் அபராதம்


உதகையில் கோடப்பமந்து கால்வாயில் குப்பையை கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: கோடப்பமந்து காவ்வாயில் பொதுப்பணித்துறை சார்பில் தூர்வாரும் பணி நடைபெறுகிறது.

இத்தகைய சூழலில், பல இடங்களில் மிகுந்த அளவிலான குப்பைகள், குறிப்பாக வீட்டு உபயோகப் பொருள்களான பால் கவர்கள், தண்ணீர் பாட்டில்கள், கிழிந்த துணிகள், காய்கறிகள், பிளாஸ்டிக் குப்பை ஆகியவை கால்வாயில் வீசப்படுகின்றன.

கால்வாயின் வழியாக செல்லும் நீர், உதகை ஏரியில் குப்பைகளோடு கலப்பதால், உதகை ஏரியும் மாசடைகிறது. நகரின் சுகாதாரத்தை காக்கும் வகையில் கோடப்பமந்து கால்வாயில் குப்பை கொட்டுவதற்கு தடை விதிக்கப்படுகிறது.

மீறி குப்பையை கொட்டுபவர்களுக்கு ரூ.2,000 வரை அபராதமும் விதிக்கப்படும். அத்துடன் கோடப்பமந்து கால்வாயில் கொட்டும் நபர்களே குப்பைகளை கால்வாயில் இறங்கி சுத்தம் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

உதகையின் அழகை பராமரிக்க பொதுமக்கள் உதவ வேண்டும். இக்கால்வாயில் குப்பைகள் கொட்டும் நபர்கள் குறித்து தெரியவந்தால், 94430-77789, 98949-61554 98659-98899 ஆகிய அலைபேசி எண்களில் புகார் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.